வரலாற்றில் இன்று நவம்பர் 19.2021
வரலாற்றில் இன்று நவம்பர் 19.2021
நவம்பர் 19 கிரிகோரியன் ஆண்டின் 323 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 324 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 42 நாட்கள் உள்ளன.
இன்றைய தின நிகழ்வுகள்.
👉 461 – லிபியசு செவெரசு மேற்கு உரோமைப் பேரரசராக முடிசூடினார்.
👉 636 – ராசிதீன் கலீபாக்கள் ஈராக்கின் அல்-காடிசியா நகரில் சாசானியப் பேரரசுப் படைகளைத் தோற்கடித்தனர்.
👉1493 – கிறித்தோபர் கொலம்பசு முதல் நாள் தான் கண்ட தீவின் கரையை அடைந்து அதற்கு சான் ஜுவான் பட்டீஸ்டா (பின்னாளைய புவேர்ட்டோ ரிக்கோ) எனப் பெயர் சூட்டினார்.
👉1794 – அமெரிக்கப் புரட்சிப் போரின் பின்னர் எழுந்த சில பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு ஐக்கிய அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
👉1816 – வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
👉1862 – இலங்கை, காலியில் இருந்து இங்கிலாந்து நோக்கிச் சென்ற கொழும்பு என்ற பயணிகள் கப்பல் மாலைதீவுகளுக்கு அருகே மினிக்காய் தீவில் மூழ்கியது.[1][2]
👉1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் கெட்டிசுபெர்க்கு உரையை நிகழ்த்தினார்.
👉1881 – உக்ரேனில் ஒடெசா நகரில் விண்வீழ்கல் ஒன்று வீழ்ந்தது.
👉1912 – முதலாம் பால்க்கன் போர்: செர்பிய இராணுவம் பித்தோலா நகரைக் கைப்பற்றியதன் மூலம், மாக்கடோனியாவில் ஐந்து நூற்றாண்டு கால உதுமானிய ஆட்சி முடிவுக்கு வந்தது.
👉1932 – சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் இரண்டாவது மனைவி தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
👉1941 – இரண்டாம் உலகப் போர்: மேற்கு ஆஸ்திரேலியாவில் சிட்னி, கோர்மொரன் ஆகிய போர்க்கப்பல்களுக்கிடையில் நிகழ்ந்த மோதலில் இரண்டும் மூழ்கின. இதில் 645 ஆத்திரேலியக் கடற்படையினரும் 77 நாட்சி ஜெர்மனியக் கடற்படையினரும் உயிரிழந்தனர்.
👉1942 – இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் சண்டை: சோவியத் படையினர் வோல்கோகிராட் நகர் மீது மீள்தாக்குதலை ஆரம்பித்தனர். இது பின்னர் அவர்களுக்கு வெற்றியை அளித்தது.
👉1943 – பெரும் இன அழிப்பு: நாட்சிகள் மேற்கு உக்ரைனில் லிவீவ் நகரில் இருந்த யானொவ்சுக்கா வதை முகாமை முழுமையாக அழித்தனர். குறைந்தது 6,000 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
👉1946 – ஆப்கானித்தான், ஐசுலாந்து, சுவீடன் ஆகியன ஐநாவில் இணைந்தன.
👉1969 – அப்போலோ 12 விண்கலத்தில் சென்ற சார்ல்சு கொன்ராட், ஆலன் பீன் ஆகியோர் சந்திரனில் இறங்கி நடந்த மூன்றாவது, நான்காவது மனிதர் என்ற பெயரினைப் பெற்றனர்.
👉1969 – பிரேசில் உதைப்பந்தாட்ட வீரர் பெலே தனது 1,000வது இலக்கைப் பெற்றார்.
👉1977 – போர்த்துகல் போயிங் விமானம் ஒன்று மதீராவில் விபத்துக்குள்ளாகியதில் 131 பேர் உயிரிழந்தனர்.
👉1984 – இலங்கை இராணுவத்தின் வட மாகாணத் தளபதி பிரிகேடியர் ஆரியப்பெரும யாழ்ப்பாணம், கட்டுவன் என்ற இடத்தில் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
👉1984 – மெக்சிக்கோ நகரில் எண்ணெய்க்குதங்களில் ஏற்பட்ட பெரும் வெடிப்புகளினால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 500 பேர் உயிரிழந்தனர்.
👉1985 – பனிப்போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ரொனால்ட் ரேகன், சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் இருவரும் ஜெனீவாவில் முதன் முறையாகச் சந்தித்தனர்.
👉1991 – தமிழீழ காவல்துறை நிறுவப்பட்டது.
👉1999 – சீனா தனது முதலாவது சென்சூ 1 விண்கலத்தை ஏவியது.
👉2002 – கிரேக்க எண்ணெய்த் தாங்கிக் கப்பல் பிரெஸ்டிச் கலீசியா அருகே இரண்டாகப் பிளந்ததில், 76,000 கனமீ எண்ணெய் கசிந்தது.
👉2010 – நியூசிலாந்தில் பைக் ஆற்றுச் சுரங்கத்தில் நான்கு வெடிப்புகள் நிகழ்ந்ததில் 29 பேர் உயிரிழந்தனர்.
👉2013 – பெய்ரூத்தில் ஈரானியத் தூதரகத்தில் மேற்கொள்ளப்பட்ட இரட்டைத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர், 160 பேர் காயமடைந்தனர்.
இன்றைய தின பிறப்புகள்.
👉1600 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு (இ. 1649)
👉1711 – மிகைல் இலமனோசொவ், உருசிய எழுத்தாளர், அறிவியலாளர் (இ. 1765)
👉1775 – யொஃகான் இல்லிகெர், செருமானிய விலங்கியலாளர் (இ. 1813)
👉1828 – இராணி இலட்சுமிபாய், ஜான்சி பேரரசி (இ. 1858)
👉1831 – சேம்சு கார்ஃபீல்டு, அமெரிக்காவின் 20வது அரசுத்தலைவர் (இ. 1881)
👉1845 – அகனேசு கில்பெர்னே, இந்திய-ஆங்கிலேய வானியலாளர் (இ. 1939)
👉1907 – மு. திருச்செல்வம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1976)
👉1909 – பீட்டர் டிரக்கர், ஆத்திரிய-அமெரிக்கக் கல்வியாளர், நூலாசிரியர் (இ. 2005)
👉1914 – ஏக்நாத் ராமகிருஷ்ண ரானாடே, இந்திய சுதந்திர போராட்ட செயற்பாட்டாளர், சீர்திருத்தவாதி (இ. 1982)
👉1917 – இந்திரா காந்தி, 3வது இந்தியப் பிரதமர் (இ. 1984)
👉1918 – என்றிக் சி. வான் தெ அல்ஸ்ட், இடச்சு வானியலாரும். கணிதவியலாளர் (இ. 2000)
👉1918 – தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா, இந்திய மார்க்சியப் புலமையாளர் (இ. 1993)
👉1923 – சலில் சௌதுரி, இந்திய இயக்குநர், இசையமைப்பாளர் (இ. 1995)
👉1928 – தாரா சிங், இந்திய மற்போர் வீரர், நடிகர், அரசியல்வாதி (இ. 2012)
👉1932 – எலினார் பிரான்சிசு கெலின், அமெரிக்க வானியலாளர் (இ. 2009)
👉1933 – ஜேக் வெல்ச், அமெரிக்கப் பொறியியலாளர், தொழிலதிபர்
👉1936 – அரவிந்த் பட்நாகர், இந்திய வானியலாளர் (இ. 2006)
👉1938 – டெட் டேர்னர், அமெரிக்கத் தொழிலதிபர்
👉1939 – எஸ். எம். கார்மேகம், இலங்கை மலையக எழுத்தாளர் (இ. 2005)
👉1951 – க. பத்மநாபா, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி நிறுவனர் (இ. 1990)
👉1951 – சீனத் அமான், இந்தியத் திரைப்பட நடிகை
👉1954 – அப்துல் பத்தா அல்-சிசி, எகிப்தின் 6வது அரசுத்தலைவர்
👉1961 – விவேக், தமிழகத் திரைப்பட நகைச்சுவை நடிகர் (இ. 2021)
👉1961 – மெக் ரையன், அமெரிக்க நடிகை
👉1973 – சகீலா, இந்திய நடிகை
👉1975 – சுஷ்மிதா சென், இந்தித் திரைப்பட நடிகை
👉1976 – அருண் விஜய், தமிழகத் திரைப்பட நடிகர்
👉1976 – ஜேக் டோர்சி, அமெரிக்கத் தொழிலதிபர், டுவிட்டரை ஆரம்பித்தவர்களில் ஒருவர்
👉1986 – சுவேதா மோகன், இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி
இன்றைய தின இறப்புகள்.
👉498 – இரண்டாம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை)
👉1665 – நிக்கோலா போசின், பிரான்சிய-இத்தாலிய ஓவியர் (பி. 1594)
👉1806 – இரண்டாம் ஷா ஆலம், இந்தியாவின் 16-வது முகலாயப் பேரரசர் (பி. 1728)
👉1828 – பிராண்ஸ் சூபேர்ட், ஆத்திரிய இசையமைப்பாளர் (பி. 1797)
👉1975 – பிரான்சிஸ்கோ பிராங்கோ, எசுப்பானியப் பிரதமர் (பி. 1892)
👉1975 – சாலமன் பிக்கெல்னர், உருசிய-சோவியத் வானியலாளர் (பி. 1921)
👉1982 – எஸ். ஏ. அசோகன், தமிழகத் திரைப்பட நடிகர் (பி. 1931)
👉1984 – சி. வி. வேலுப்பிள்ளை, இலங்கை மலையக எழுத்தாளர், அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி (பி. 1914)
👉1998 – புச்சியித்தா தெத்துசுயா, சப்பானிய-அமெரிக்கக் கல்வியாளர் (பி. 1920)
👉2008 – எம். என். நம்பியார், தென்னிந்திய நடிகர் (பி. 1919)
👉2011 – பேசில் ட’ஒலிவேரா, தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர் (பி. 1931)
👉2013 – பிரடெரிக் சேங்கர், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய வேதியியலாளர் (பி. 1918)
👉2017 – சார்லஸ் மேன்சன், அமெரிக்க மதத் தலைவர், கொலையாளி (பி. 1934)
👉2019 – டி. எம். ஜயரத்ன, இலங்கையின் 14-வது பிரதமர் (பி. 1931)
இன்றைய தின சிறப்பு நாள்.
👉பன்னாட்டு ஆண்கள் நாள்.
👉உலகக் கழிவறை நாள்.
👉விடுதலை நாள் (மாலி)
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.