வரலாற்றில் இன்று நவம்பர் 28.2021

 வரலாற்றில் இன்று நவம்பர் 28.2021


நவம்பர் 28  கிரிகோரியன் ஆண்டின் 332 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 333 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 33 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்.

👉1520 – தென்னமெரிக்கா ஊடாகப் பயணம் செய்த போர்த்துகேய நாடுகாண்பயணி மகலன் மகெல்லன் நீரிணையூடாகச் சென்றார்.

👉1660 – கிறிஸ்டோபர் ரென், இராபர்ட் வில்லியம் பாயில் உட்பட 12 பேர் இணைந்து அரச கழகம் எனப் பின்னர் அழைக்கப்பட்ட அமைப்பை ஆரம்பித்தனர்.

👉1814 – இலண்டனின் தி டைம்ஸ் நாளிதழ் நீராவியால் இயக்கப்படும் அச்சியந்திரத்தைக் கொண்டு முதன்முதலாக வெளியிடப்பட்டது.[1]

👉1821 – பனாமா எசுப்பானியாவியம் இருந்து பிரிந்து பாரிய கொலம்பியாவுடன் இணைந்தது.

👉1843 – அவாய் இராச்சியத்தை ஐக்கிய இராச்சியம், பிரான்சு ஆகியன விடுதலை அடைந்த தனி நாடாக அங்கீகரித்தன.

👉1848 – மாத்தளைக் கலகத்தின் தலைவரும், கண்டி இராச்சியத்திற்கு உரிமை கோரியவருமான கொங்காலேகொட பண்டாவிற்கு மரண தண்டனைத் தீர்ப்பு அளிக்கப்பட்டது.[1] இவர் பின்னர் மலாக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார்.

👉1885 – செர்பிய-பல்கேரியப் போரில் பல்கேரியா வென்றது.

👉1893 – நியூசிலாந்தில் முதற்தடவையாக பெண்கள் வாக்களித்தனர்.

👉1899 – இரண்டாம் பூவர் போர்: மோடர் ஆற்று சமரில் பிரித்தானியா பெரும் தோல்வியைச் சந்தித்தது.

👉1905 – அயர்லாந்து தேசியவாதி ஆர்தர் கிறிஃபித் அயர்லாந்தின் விடுதலைக்காக சின் பெயின் என்ற அரசியல் கட்சியை உருவாக்கினார்.

👉1908 – பென்சில்வேனியாவின் மரியான்னா என்ற இடத்தில் சுரங்கம் ஒன்று வெடித்ததில் 154 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார்.

👉1912 – அல்பேனியா உதுமானியப் பேரரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

👉1920 – அயர்லாந்து விடுதலைப் போர்: ஐரியக் குடியரசு இராணுவத்தினர் பிரித்தானியப் படை முகாம் ஒன்றைத் தாக்கி 17 பேரைக் கொன்றனர்.

👉1942 – அமெரிக்காவின் பாஸ்டன் நகர இரவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயினால் 492 பேர் இறந்தார்கள்.

👉1943 – இரண்டாம் உலகப் போர்: செருமனியையும், யப்பானையும் ஒடுக்குவது பற்றி, அமெரிக்க ஜனாதிபதி பிராங்க்ளின் ரூசவெல்ட், பிரித்தானியத் தலைமை அமைச்சர் வின்ஸ்டன் சர்ச்சில், உருசியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஆகிய மூவரும் தெகுரானில் சந்தித்துப் பேசினார்கள்.

👉1944 – இரண்டாம் உலகப் போர்: அல்பேனியா அல்பேனியப் பார்ட்டிசான்களினால் விடுவிக்கப்பட்டது.

👉1958 – சாட், கொங்கோ குடியரசு, காபோன் ஆகியன பிரெஞ்சு ஆட்சியின் கீழ் சுயாட்சி பெற்றன.

👉1960 – மூரித்தானியா பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.

👉1964 – நாசா செவ்வாய்க் கோளை நோக்கி மரைனர் 4 விண்கலத்தை ஏவியது.

👉1965 – வியட்நாம் போர்: தென் விடநாமிற்குப் படைகளை அனுப்ப முடிவு செய்துள்ளதாக பிலிப்பீன்சு அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பேர்டினண்ட் மார்க்கோஸ் அறிவித்தார்.

👉1966 – மிக்கேல் மிக்கொம்பெரோ புருண்டியின் மன்னராட்சியைக் கவிழ்த்து, தன்னை அரசுத்தலைவராக அறிவித்தார்.

👉1967 – வல்பெக்கூலா என்ற விண்மீன் குழாமின் முதலாவது துடிவிண்மீனை ஜோசெலின் பெல் பர்னல், அந்தோனி எவிழ்சு ஆகியோர் கண்டுபிடித்தனர்.

👉1971 – ஜோர்தான் பிரதமர் வாசுபி அல்-தால் பலத்தீன விடுதலை இயக்கத்தின் கருப்பு செப்டம்பர் இயக்கத்தினரால் படுகொலை செயப்பட்டார்.

👉1972 – பாரிசு நகரில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

👉1975 – கிழக்குத் திமோர் போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

👉1979 – நியூசிலாந்து விமானம் எரெபஸ் மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 257 பேரும் உயிரிழந்தனர்.

👉1980 – ஈரான் – ஈராக் போர்: மொர்வாரிது நடவடிக்கையில் ஈராக்கியக் கடற்படை ஈராக் கடற்படையினால் அழிக்கப்பட்டது.

👉1987 – தென்னாபிரிக்காவின் விமானம் இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த அனைத்து 159 பேரும் கொல்லப்பட்டனர்.

👉1989 – பனிப்போர்: செக்கோசிலோவாக்கியாவின் தனியாதிக்க உரிமையை விட்டுத்தருவதாக அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது.

👉1990 – ஐக்கிய இராச்சிய தலைமை அமைச்சர் மார்கரெட் தாட்சர் தனது பதவியை விட்டு விலகினார்.

👉1990 – லீ குவான் யூ சிங்கப்பூர் தலைமை அமைச்சர் பதவையை விட்டு விலகினார். கோ சொக் டொங் புதிய தலைமை அமைச்சரானார்.

👉1991 – தெற்கு ஒசேத்தியா ஜோர்ஜியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

👉1994 – ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய நோர்வே மக்கள் எதிர்த்து வாக்களித்தனர்.

👉2006 – நாசாவின் நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் புளூட்டோவின் முதலாவது படத்தை அனுப்பியது.

👉2014 – நைஜீரியாவின் கனோ நகரில் பள்ளிவாசல் ஒன்றில் மூன்று குண்டுகள் வெடித்ததில் 120 பேர் கொல்லப்பட்டனர்.

👉2016 – கொலம்பியாவின் மெதெயின் நகருக்கு அருகில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 81 பேர் உயிரிழந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்.

👉1293 – எசுன் தெமுர் கான், சீனப் பேரரசர் (இ. 1328)

👉1757 – வில்லியம் பிளேக், ஆங்கிலேயக் கவிஞர், ஓவியர் (இ. 1827)

👉1820 – பிரெட்ரிக் எங்கெல்சு, செருமானிய-ஆங்கிலேய மார்க்சிய மெய்யியலாளர் (இ. 1895)

👉1826 – மத்வேய் கூசெவ், உருசிய வானியலாளர் (இ. 1866)

👉1864 – ஜேம்ஸ் ஆலன், ஆங்கிலேய மெய்யியலாளர், நூலாசிரியர் (இ. 1912)

👉1901 – எட்வினா மவுண்ட்பேட்டன், மவுண்ட்பேட்டன் பிரபுவின் மனைவி (இ. 1960)

👉1907 – ஆல்பர்டோ மொராவியா, இத்தாலிய எழுத்தாளர், இதழாளர் (இ. 1990)

👉1918 – வி. கே. வெள்ளையன், இலங்கை மலையகத் தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி (இ. 1971)

👉1927 – சுல்தான் அப்துல் ஹாலிம், மலேசிய மன்னர் (இ. 2017)

👉1927 – எச். வி. ஹண்டே, தமிழக மருத்துவர், அரசியல்வாதி

👉1945 – அமர்கோஸ்வாமி, இந்திய எழுத்தாளர், பத்திரிக்கையாளர்

👉1961 – அல்போன்சா குயூரான், மெக்சிக்கோ இயக்குநர்

👉1962 – யோன் சுருவாட், அமெரிக்க நடிகர்

👉1967 – ஆன்னா நிக்கோல் இசுமித், அமெரிக்க நடிகை (இ. 2007)

👉1976 – ரயன் குவான்டென், ஆத்திரேலிய நடிகர்

👉1984 – மேரி எலிசபெத் வின்ச்டீத், அமெரிக்க நடிகை

👉1985 – சித்தார்த் வேணுகோபால், தமிழ்த் திரைப்பட நடிகர்

👉1992 – ஆடம் ஹிக்ஸ், அமெரிக்க நடிகை.

இன்றைய தின இறப்புகள்.

👉1694 – மட்சுவோ பாஷோ, சப்பானியக் கவிஞர் (பி. 1644)

👉1859 – வாசிங்டன் இர்விங், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1783)

👉1872 – மேரி சோமர்வில்லி, இசுக்கொட்லாந்து-இத்தாலிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1780)

👉1873 – காத்தரினா சுகார்பெல்லினி, இத்தாலிய வானியலாளர் (பி. 1808)

👉1890 – ஜோதிராவ் புலே, இந்திய மெய்யியலாளர், செயற்பாட்டாளர் (பி. 1827)

👉1893 – அலெக்சாண்டர் கன்னிங்காம், பிரித்தானியத் தொல்லியலாளர் (பி. 1814)

👉1925 – ஆல்பிரட் பெரோ, பிரான்சிய இயற்பியலாளர் (பி. 1863)

👉1939 – ஜேம்ஸ் நெய்ஸ்மித், கூடைப்பந்தாட்ட விளையாட்டைக் கண்டுபிடித்த கனடியர் (பி. 1861)

👉1954 – என்ரிக்கோ பெர்மி, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1901)

👉1968 – எனிட் பிளைட்டன், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1897)

👉2009 – பொ. ம. இராசமணி, தமிழகத் தமிழறிஞர் (பி. 1936)

இன்றைய தின சிறப்பு நாள்.

👉விடுதலை நாள் (அல்பேனியா, துருக்கியிடம் இருந்து 1912)

👉விடுதலை நாள் (மூரித்தானியா, பிரான்சிடம் இருந்து 1960)

👉விடுதலை நாள் (பனாமா, எசுப்பானியாவிடம் இருந்து 1821)

👉குடியரசு நாள் (புருண்டி)

👉குடியரசு நாள் (சாட்)

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.