பைஸர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள கொவிட் மாத்திரை.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
பைஸர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள கொவிட் மாத்திரை.
அமெரிக்காவின் பைஸர் நிறுவனம் கொவிட் நோய் சிகிச்சைக்கான மாத்திரை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பைஸர் நிறுவனம் கொவிட் நோய் சிகிச்சைக்கான மாத்திரை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
பெக்ஸ்லொவிட் (Paxlovid) என பெயரிடப்பட்டுள்ள இந்த மாத்திரை, பரிசோதனை நடவடிக்கைகளில் 87 சதவீதம் வினைத்திறனை வெளிப்படுத்தி இருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த மருந்து, கொரோனா வைரஸ் மனித உடலில் சென்று பல்கிப்பெருகுவதைத் தடுக்கிறது. கொவிட் நோய்க்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்ததும் இன்னும் 2 வகையான மாத்திரைகளுடன் இது வழங்கப்பட வேண்டும்.
இதன் மூலம் நோயின் வீரியம் குறைவதுடன் மரணிக்கும் அபாயமும் குறைவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் இதன் பரிசோதனை அறிக்கைகளை அமெரிக்க மருந்து ஆலோசனை சபையிடம் அந்த நிறுவனம் கையளிக்க உள்ளது.
எனினும், இந்த மருந்துக்கு இன்னும் உரிய அனுமதிகள் கிடைக்கப்பெறவில்லை.
அதேநேரம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் தகவல் படி மில்லியன் கணக்கான மாத்திரைகளை அமெரிக்கா ஏற்கனவே முன்பதிவு செய்துள்ளது.
அதனைப் போன்றே பிரித்தானியாவும் 250 லட்சம் மாத்திரைகளை முன்பதிவு செய்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே பிரித்தானியாவின் மருந்து கட்டுப்பாட்டு பிரிவு மொனுபிரவிர் என்ற மருந்துக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில் பைஸர் நிறுவனமும் இந்த மருந்தினை அறிவித்திருக்கிறது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன் #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.