நாடு மீண்டும் முடக்கப்படும்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 நாடு மீண்டும் முடக்கப்படும்.

பொருளாதாரம் சரிந்து மிகவும் பாதிப்பு ஏற்படலாம்- ஹெகலிய நாட்டில் மக்கள் சுகாதார வழிமுறைகளைச் சரியான முறையில் பின்பற்றத் தவறும் பட்சத்தில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்படும் என சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 

கொரோனாவைக் கட்டுப்படுத்த மக்களின் பங்களிப்பைப் பொறுத்தே பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்துத் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

கொரோனா நோயைக் கட்டுப்படுத்துவதற்கு மக்களின் பங்களிப்புடன், இந்தத் துரதிர்ஷ்டமான நிலைமையை நாட்டிலிருந்து துடைத்தெறிய முடியும் எனவும், உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையானது வைரஸைக் கட்டுப்படுத்துவதில் சிறந்த நிலையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 தற்போது, வெற்றிகரமான முறையில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளமையால் சுகாதார வழிகாட்டுதல்களின்படி வாழ்வதை மக்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்தத் தொற்று நோய் மிக நீண்ட காலமாகத் தொடர்ந் தது என்றும் இதனால் பொருளாதார பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்றும், பலர் சிரமத்துக்குள்ளாகலாம் என்றும் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.