கொரோனா புதிய அலை உருவாகுவதற்கு சிவப்பு எச்சரிக்கை.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 கொரோனா புதிய அலை உருவாகுவதற்கு சிவப்பு எச்சரிக்கை.
நாட்டில் அமல்படுத்தப்பட்டிருந்த பிரயாணத்தடை நீக்கப்பட்டமையின் காரணமாக மிக விரைவில் மேலுமொரு கொரோனா அலை உருவாகுவதற்கான கடும் எச்சரிக்கை நிலை உருவாகியுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.
அவ்வாறானவொரு நிலை ஏற்படாமல் தவிர்த்துக்கொள்வதற்கான பரிந்துரைகள் உள்ளடங்கிய கடிதம் அந்த சங்கத்தினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் தற்போதைய சட்டம் மற்றும் வரையறைகளைக் கடுமையாக்க வேண்டும் என்றும் அந்தச் சங்கம் பரிந்துரைத்துள்ளது.
அதன்போது சுகாதார நடைமுறைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை முழுமையாகக் கண்காணித்தல் மற்றும் சான்றுப்படுத்தல் கட்டாயமானது என்றும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அதேபோன்று முக்கிய தரப்பினருக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியைச் செலுத்துவது அவசியம் என்றும் கொரானா தொற்ற பரவலடையும் எச்சரிக்கை தன்மையை தற்போதைய நிலையில் கவனத்தில் கொள்ளவேண்டிய கட்டாயம் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மறுவாழ்வாக்கப்பட வேண்டிய 60 வயதுக்கு குறைவான நோயாளர்கள் மற்றும் சகல சுகாதார சேவையாளர்களுக்கு மூன்றாம் கட்டமாக பைசர் தடுப்பூசி வழங்க வேண்டும் என்றும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது
கட்டடங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகள், சமய நிகழ்வுகள், மரண சடங்குகள், இசை நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள் ஆகிய நிகழ்வுகளில் பங்குபற்றுவோரின் எண்ணிக்கையை வரையறுக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇
https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன் #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.