LIVE - 2022 வரவு செலவுத் திட்ட நேரலை...

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 LIVE - 2022 வரவு செலவுத் திட்ட நேரலை...

வரவு-செலவுத்திட்ட யோசனைகளை முன்வைத்தல் பிற்பகல் 02.00 மணிக்கு ஆரம்பமாகியது . 

இது சுதந்திர இலங்கையின் 76ஆவது வரவு-செலவுத்திட்டமாகும். 1.54PM - 2022 ஆம் நிதி ஆண்டுக்கான சமகால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்துவதற்காக, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார்.

 2.02PM - வரவு செலவு திட்ட உரை ஆரம்பிக்க சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். 2.05PM -நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ 2022 ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையை ஆரம்பித்தார்.

 2.09PM- கொவிட் தொற்று காரணமாக அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பு 500 பில்லியனுக்கும் அதிகம் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

02.14PM-ஏனைய நாடுகளை விட பொருளாதார மீளெழுச்சியை ஏற்படுத்த முடிந்தது. 02.15PM-தொற்றுநோய் பரவும் காலங்களில் சுகாதாரத்துறை, பாதுகாப்புத் துறையினருக்கு மேலதிகமாக நமது வர்த்தகத்துறையினர் அத்தியாவசிய சேவைகளை மக்களுக்கு வழங்குவதில் ஒத்துழைத்தார்கள்.

 02.15PM- எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் மக்களுக்கு வழங்க முடிந்தது. 02.15PM - சர்வதேச போதைப்பொருள் மாபியாவுக்கு இலங்கையை உள்ளீர்த்துக்கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது அபாயமானதாகும். 

02.15PM - சர்வதேச போதைபொருளுக்கு அடிமையாவதிலிருந்து மீட்பதற்கு ஜனாதிபதி, பொலிஸ் இராணுவம் என்பன பாரிய செயற்பாடுகளை முன்னெடுத்தது. 

02.15PM - உலக நாடுகள் முகங்கொடுக்கும் பல்வேறு சவால்களுக்கு நாங்களும் முகங்கொடுக்க வேண்டிய நிலைமை உருவானது.

 02.16PM- பொருட்களின் விலையை அதிகரிப்பது சாதாரணமாகியுள்ளது. இதனை தேசிய ரீதியில் மாத்திரம் கட்டுப்படுத்த முடியாது.

 சர்வதேச உதவிகளும் தேவையாகும். 02.18PM- கடந்த காலங்களில் பொருட்கள், சேவைகளின் விலைகள் அதிகரித்தன. ஆனால் எந்தவொரு அரசாங்கத்தாலும் அவற்றை குறைக்க முடியாமல்போனது.

 02.20PM- சந்தையில் பொருட்கள், சேவைகள் விலைகளை முகாமைத்துவம் செய்வதென்பது நீண்டகால செயற்பாடாகும். 

02.20PM- சிறு உற்பத்தியாளர்கள் முதல் பாாிய உற்பத்தியாளர்கள் வரை தடையின்றி சேவைகளை வழங்கும் சூழலை நாம் உருவாக்க வேண்டும். 02.21PM- அந்நிய செலாவணியின் இருப்பு குறைந்துள்ளதையும் ரூபாவின் பெறுமதி குறைந்துள்ளதையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

 02.23PM- சுற்றுலாத்துறையினால் கடந்த காலங்களில் கிடைக்கப்பெற்ற ரூ. 5 பில்லியனை கொரோனா பாதிப்பால் இழந்தோம். 

02.23PM- வரவு செலவுத்திட்டத்தில் அதிக செலவீனம், கடன்களை செலுத்துவதற்கே ஒதுக்கப்படுகிறது. 02.25PM- நல்லாட்சி அரசாங்கத்தால் பெற்றுக்கொண்ட 6.9 பில்லியன் டொலர் கடனை எங்களுடைய அரசாங்கம் செலுத்த வேண்டி வந்தது. 02.26PM- வெளிநாட்டு நாணய இருப்பை அதிகாித்துக்கொள்வதற்கு நாம் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். சந்தைப் பொருட்களை அதிகாிக்க வேண்டிய தேவை உள்ளது.

 02.27PM- கடன் பெற்றுக்கொள்ளாது வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க எதிர்பார்க்கின்றோம். 02.29PM- சுற்றுலாத்துறையை சிறப்பாக பேணுவதற்கு தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தல், துறைமுக, விமான நிலையங்களுக்கு அருகில் உள்ள வர்த்தகங்களை மேம்படுத்தல் உள்ளிட்டவற்றுக்கு நாம் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். 

02.30PM- 2020 ஆம் ஆண்டு மாத்திரம் நூற்றுக்கு 20 வீதம் சமூக நலனுக்கு செலவிடப்பட்டுள்ளது. 02.31PM- உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தலில் தடையின்றி அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு உணவு பெற்றுக்கொடுத்தலை முக்கியமாகக் குறிப்பிப்படுகிறது. 

02.32PM- நாட்டில் சமூக, பொருளாதார ரீதியில் ஏற்பட்டுள்ள பாதிப்பை விளக்கினேன். 02.33PM- வரவு செலவுத்திட்ட யோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கு அனைத்துத் தரப்பினருடனும் நாம் கலந்துரையாடல் நடத்தினோம்.

 அவர்களின் முன்மொழிவுகளுக்கு செவிமடுத்தோம். 02.36PM- 2022 வரவு- செலவுத்திட்டத்தை தயாரிக்கும் போது ஜனாதிபதியின் “சுபீட்சத்தின் நோக்கு என்ற தேசிய கொள்கையை முழுமையாக கவனத்தில் கொண்டோம். 02.36PM- வரவு செலவுத்திட்ட உரையின்போது நேரடி ஒளிபரப்புக்கு சமாந்தரமாக சைகை மொழி மூல விளக்கமும் வழங்கப்படுகிறது. 

02.37PM- அரசிடமுள்ள அனைத்து சொத்துக்களும் முழுமையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 02.40PM- அரச நிறுவனங்களில் சேவையாற்றுவோருக்கு வழங்கப்படும் பெற்றோலை மாதம் 5 லீற்றராக குறைப்பதற்கும் தொலைபேசி கட்டணங்களை 25 வீதமாக குறைப்பதற்கும் மின்சார செலவை குறைப்பதற்கு சூாிய சக்தியை உபயோகிப்பதற்கும் பாிந்துரைகளை முன்வைக்கிறேன். 

02.41PM- தற்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் இடைவிடாது 5வருடங்கள் சேவை செய்ய வேண்டும். அதனை 10 வருடங்கள் அதிகரிக்க முன்மொழிகிறேன். 

இது ஜனாதிபதி பதவி உள்ளிட்ட அனைவரும் அடங்குவர். 02.45PM- சமுர்த்தி வங்கிகளை அபிவிருத்தி செய்வதற்கு யோசனையை முன்வைக்கின்றோம். 

02.46PM- சமுதாய நலன்புாிகளுக்காக மக்களை தொிவுசெய்யும்போது விஞ்ஞானபூர்வமான திட்டங்கள் அவசியமாகும். 02.47PM- கூட்டுறவு சங்கங்களையும் மேம்படுத்த யோசனை முன்வைக்கின்றேன்.

 02.49PM- இலங்கையில் காப்புறுதி கூட்டுதாபனத்தின் வணிக ரீதியான அணுகுமுறையை போட்டி நிலைமைக்கு அதனை எடுத்துச் சென்று, சகலருக்கும் பலன் கிடைக்கக் கூடிய வகையில் மாற்றுதல். நேரடியான வருமானத்தை ஈட்டுவதற்கு பயன்படாத சொத்துக்களை பயன்படும் வகையில் மாற்றுதல்.

 நேரடியான வருமானத்தை ஈட்டுவதற்கு பயன்படாத சொத்துக்களை பயன்படும் வகையில் மாற்றுதல்.

 02.51PM- நாடு முழுவதும் தொலைத்தொடர்பு கட்டமைப்பை வரைவில் நிறுவி, நாடு முழுவதிலுமுள்ள 10,115 பாடசாலைகளுக்கும் உரிய தொழிநுட்பத்தை பயன்படுத்தி, அதிவேக இணைய ப்ரோட் பேண்ட் வசதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

02.52PM- அரச ஊழியர்களுக்கு புதிய சம்பள முறைமை ஏற்படுத்தப்படும். உற்பத்தித்திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டே இது செய்யப்படுகின்றது. 

02.55PM- மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மீதான சட்டத்தை அறிமுகப்படுத்த முன்மொழிகிறேன். வரிகளை முறையாக வசூலிப்பதற்கு உள்நாட்டு வரி திணைக்களத்தை பலப்படுத்துமாறும் யோசனை முன்வைக்கின்றோம்.

 தொலைக்காட்சிகளுக்கான அலைவரிசை பகிரங்க ஏலத்தில் விடப்படும். 02.56PM- சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து இலங்கையில் மருந்துவகைகளை உற்பத்திசெய்ய நடவடிக்கை 02.57PM- ஆடைத்தொழிற்சாலைகளினால் 4 பில்லியன் வருமானம் பெற்றாலும் புடவைகளை பெற்றுக்கொள்ள 2 பில்லியன் செலவு செய்வதால் தேவையான புடவைகளை நாட்டுக்குள் உற்பத்தி செய்ய நடவடிக்கை 03.00PM- ஆயுர்வேத மருத்துவமனைகளை ஏற்படுத்துவதற்கும் ஆயுர்வேத வைத்திய துறையை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். 

03.02PM- இளைஞர்களை வேலைத் தேடுபவர்களுக்கு பதிலாக தொழில் வழங்குனர்களாக மாற்றும் திட்டத்தை உருவாக்கி வருகின்றோம்.

 03.02PM- விவசாயிகளை பாதுகாப்பதற்கு எங்களுடைய அரசாங்கம் முன்னின்று செயற்படும். விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கும் தேசிய விவசாயத்தை மேம்படுத்துவதற்கும் விசேட வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம். 

03.04PM- இலங்கையை முதன்மையான இரத்தினக்கற்கள் கொள்வனவு மய்யமாக மாற்றுவது எமது நோக்கமாகும். 03.04PM- இலங்கையை ஐந்து மகா கொள்கைளைக் கொண்ட நாடாக மாற்றுவோம். 

03.05PM- வெளிநாட்டு முதலீடுகளை அதிகாிப்பதற்காக தற்போது நடைமுறையிலுள்ள நிபந்தனைகளை தளர்த்தி புதிய முறைகளை அறிமுகப்படுத்த திட்டம். 

03.06PM- வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் மூலம் கிடைக்கும் வெளிநாட்டு செலாவணியை அதிகாிப்பதற்காக , தூதுவர்களுடன் கலந்துரையாடி வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை 03.06PM- இறப்பர் சார்ந்த உற்பத்திகளின் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தவும் இறப்பர் சார்ந்த உற்பத்தி தொழிலை ஊக்குவிக்கவும் முன்மொழிகிறேன்.

 03.07PM- வெளிநாடுகளுக்குச் செல்ல காத்திருக்கும் 130,000 பேருக்கு விரைவாக தடுப்பூசி வழங்குவதற்கு எதிர்பார்க்கின்றோம். 03.07PM- சேதன பசளை உற்பத்தி திறனை அதிகரிப்பது கிராமிய அளவில் மேற்கொள்ளப்படும்.

 03.09PM- புதிய வியாபாரத்தை பதிவு செய்வதற்கு அறவிடப்படும் கட்டணத்தை 2022 ஆம் ஆண்டு அறவிடாதிருப்பதற்கு தீர்மானித்துள்ளோம். 

03.10PM- அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் செலவுகளைப் பொறுத்தவரையில், அவை பொதுமக்களுக்கான முதலீடுகள் என்றே கருதுகிறேன். 

03.12PM- நாட்டில் 80 வீதமானோர் விவசாயத்துறை, விவசாயத்துறைசார்ந்த தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள். விவசாயத்துறையில் உள்ள சவால்களை நாம் அடையாளங்கண்டுள்ளோம்.

 03.13PM- தொழிலுக்காக வெளிநாட்டு வேலைகளுக்குச் செல்பவர்களின் அறிவுத்திறனை, பயிற்சியை மேம்படுத்த, வெளிநாட்டு தூதுவர்களுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை அதிகரிக்க முன்மொழிகிறேன். 

03.14PM- 2022 ஆம் ஆண்டுக்கு தேவையான சேதன பசளையை உற்பத்தி செய்வதற்கு முதற்கட்ட நடவடிக்கைகள் ஆரம்பம். 03.15PM- உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டில் விவசாய தொழில்நுட்பத்தை துாிதமாக மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.


 03.15PM- புகையிரத திணைக்களத்தால் திறம்பட பயன்படுத்தப்படாத காணிகளை கலப்பு அபிவிருத்திக்காக பயன்படுத்த நடவடிக்கை 03.15PM- வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஏற்றுமதியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சட்டம் இயற்றப்படும். 

03.17PM- பெருந்தோட்ட, சிறு பயிர்ச்செய்கைகளின் விளைச்சலை அதிகாிப்பதற்காக நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்ட தொகைக்கு மேலதிகமாக 10 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு. 

03.18PM- கட்டணங்கள் மற்றும் சேவைகளை தரப்படுத்துவதில் கவனம் செலுத்தி, முச்சக்கர வண்டித் தொழிலுக்கு ஒழுங்குமுறை அதிகாரசபை அறிமுகப்படுத்தப்படும். 03.18PM- மீன் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு இதுவரை ஒதுக்கப்பட்டுள்ள தொகைக்கு மேலதிகமாக 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு 03.20PM- புதிய தொழிநுட்பத்துடன் கூடிய பெருந்தோட்டங்களை உருவாக்குவது எமது நோக்கமாகும். 

அரசுக்கு சுமையை ஏற்றாமல் ஏராளமானவர்கள் இத்துறைகளில் செயற்பட்டு வருகின்றனர். எனவே குறிப்பிட்ட அமைச்சுகளும் திணைக்களங்களும் அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பார்கள்.

 03.20PM- பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நிதி ஒதுக்கீட்டு சட்டத்தின் ஊடாக இதுவரை ஒதுக்கப்பட்டுள்ள தொகைக்கு மேலதிகமாக 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு. 03.21PM- பத்திக் ஆடை உற்பத்தி உள்ளிட்ட தேசிய உற்பத்திகளை அதிகரிக்க 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு. 

03.27PM- வீதி அபிவிருத்திக்கென 20 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு 03.28PM- அனைவருக்கும் குடிநீர் வசதி 24 மணி நேரமும் சுத்தமான குடிநீரை வழங்க 15,000 ரூபாய் மில்லியனை ஒதுக்க நடவடிக்கை 03.29PM- வீடு மற்றும் நகர அபிவிருத்திக்காக 2 ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு.

 03.30PM- பெருந்தோட்ட மக்களுக்கு புதிய குடியிருப்புகளை நிர்மாணிப்பதற்கு 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு. 03.31PM- அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களுடைய தொகுதிகளில் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு 05 மில்லியன் ரூபா மேலதிக நிதி ஒதுக்கீடு.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காகவும் மொத்தமாக 3375 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது எனவும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது உரையில் தெரிவிப்பு. 03.31PMபாடசாலை மூடப்பட்டமையினால் பாதிக்கப்பட்ட பஸ், வேன் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க 400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.

 03.38PM- கொரோனா முடக்க காலத்தில் வருமானத்தை இழந்த பாடசாலை வாகன உரிமையாளர்களுக்கு நிவாரணம் அளிக்க, 400 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழிகிறேன். 

வருமானத்தை இழந்த ஓட்டோ சாரதிகளுக்கு 600 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு 1500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 04.06PM- வனஜீவராசிகள் பாதுகாப்புக்கென ஆயிரம் மில்லியன் நிதி ஒதுக்கீடு.

 04.08PM- பொதுமக்கள் பாதுகாப்புக்கென பொலிஸ் திணைக்களத்துக்கு 500 மில்லின் ரூபா நிதி ஒதுக்கீடு 04.10PM- சிறைச்சாலைகளில் தங்க வைக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளின் உடல் நலனை பேணுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகைக்கு மேலதிகமாக 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு. 04.11PM- உலக சந்தையில் எாிபொருள், எாிவாயு உள்ளிட்ட ஏனைய பொருட்களின் விலை அதிகாிப்பால் உள்நாட்டில் பொருட்களின் விலைகள் அதிகாித்து பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. அவ்வாறு பாதிப்புக்குள்ளான மக்களுக்கு 31 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு 04.13PM- அதிபர், ஆசிாியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பதற்கு 30 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு 04.15PM- அரச நிறுவனங்களில் 2015 முதல் அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்டோருக்கு 100 மில்லியன் ரூபா நிவாரணம் 04.17PM- கிராமப்புரங்களில் பௌத்த விகாரைகள், மதத்தலங்களை புனரமைப்பு செய்வதற்கு 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு. 04.19PM- காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு. 04.23PM- உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் சிகரட்டின் விலை 5 ரூபாவால் அதிகாிப்பு. 04.25PM- மது வரியை அதிகரிப்பதால் 25 வீத வருமானத்தை பெற உத்தேசம். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன் #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.