டேவிட் வார்னர் அடித்த சிக்ஸ்..

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

டேவிட் வார்னர் அடித்த சிக்ஸ்..

குழம்பிய ரசிகர்கள் உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் டேவிட் வார்னர் சிக்ஸர் அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

டி20 உலகக் கோப்பை தொடரின் 2-வது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் நேற்று மோதின. துபாய் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 

இதனையடுத்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்தது.

 இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்தது. 

இந்தப்போட்டியில் ஹபீஸ் பந்தில் வார்னர் அடித்த சிக்ஸர்களால் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். டீப் மிட் விக்கெட் திசை மீது வார்னர் விளாசிய பிரமாண்ட சிக்ஸர் பேசுப்பொருளானது. ஹபீஸ் ஒரு பார்ட் டைம் பவுலர். 

ஸ்ட்ரீட் கிரிக்கெட்டர்ஸை விட மோசமான ஒரு பந்தை வீசினார். முதல் பந்து ஹபீஸ் வீசும்போது கையை விட்டு வழுக்கி சென்றது. அந்த பந்து லெக் சைடில் இரண்டு பிட்சாகி வந்தது.

 ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் அதனை நாம் டெட் பால் என்று கூறுவோம். இது டெட் பால் பா என்று ரசிகர்கள் கவனித்துக்கொண்டிருக்க வார்னர் இறங்கி வந்து டீப் மிட் விக்கெட் திசையில் பிரம்மாண்ட சிக்ஸர் பறக்கவிட்டார்.

 வார்னர் விளையாட்டுக்கு இந்த பந்தை அடித்திருக்கிறார் என ரசிகர்கள் நினைக்க அம்பயர் சிக்ஸ் என்றார். ரசிகர்கள் ஒரு கனம் குழப்பத்தில் இருந்தனர். 

கிரிக்கெட் விதிகளின் படி அது நோ-பால். கள நடுவரும் ஹபீஸ் வீசிய பந்தை நோபால் என்று அறிவித்தார். வார்னர் அந்தப் பந்தை சரியாக பயன்படுத்தி சிக்ஸ்ர் அடித்ததால் ஆஸ்திரேலியா அணிக்கு அது போனஸாக அமைந்தது.

 டேவிட் வார்னர் பந்தை துரத்தி செல்வதும், வார்னர் பந்தை மிஸ் செய்தால் ரன் அவுட் செய்யலாம் என விக்கெட் கீப்பர் பந்து செல்லும் திசையில் செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

 👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇

 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.