580 ஆண்டுகளில் நீண்ட நேர சந்திர கிரகணம்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
580 ஆண்டுகளில் நீண்ட நேர சந்திர கிரகணம்.
இந்த குறிப்பிட்ட பகுதி சந்திர கிரகணம் 3 மணி நேரம் 28 நிமிடங்கள் 24 வினாடிகள் நீளமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த குறிப்பிட்ட பகுதி சந்திர கிரகணம் 3 மணி நேரம் 28 நிமிடங்கள் 24 வினாடிகள் நீளமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதன்படி 580 ஆண்டுகளில் மிக நீண்ட பகுதி சந்திர கிரகணம் நவம்பர் 19 வெள்ளிக்கிழமை நிகழும், நிலவின் 97 சதவீதம் பூமியின் நிழலால் மூடப்பட்டிருக்கும் என்பதால், இது பகுதி சந்திர கிரகணம் எனப்படுகிறது.
இறுதியாக இது போன்ற சந்திர கிரகணம் 1440 பெப்ரவரி 18 அன்று ஏற்பட்டது, மேலும் இதுபோன்ற மற்றொரு நிகழ்வினை காண 2669 பெப்ரவரி 8 ஆம் திகதி வரை காத்திருக்க வேண்டும் என்றும் வானியல் ஆர்வலர்கள் கணித்துள்ளனர்.
இலங்கை நேரப்படி சந்திர கிரகணம் மதியம் 12.48 மணிக்கு தொடங்கி மாலை 4.17 மணிக்கு முடிவடையும் என்று கூறப்படுகிறது.
இது மதியம் 2.34 மணிக்கு உச்சத்தை எட்டும். இந்த பகுதி சந்திர கிரகணம் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு ஆசியா, அவுஸ்திரேலியா மற்றும் பசுபிக் பகுதிகளிலும் தெரியும்.
அது தவிர பிற்பகல் 2.34 மணிக்கு அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாமில் உள்ள சில பகுதிகளில் இருந்து இந்த அரிய நிகழ்வை பார்க்க முடியும் என்று இந்திய வானியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.