ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டப் பேரணியில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டப் பேரணியில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
ஐக்கிய மக்கள் சக்தி நேற்று (16) நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியில், சுகாதார விதிமுறைகளைக் கருத்திற்கொள்ளாது செயற்பட்டவர்கள் மற்றும் அதை ஏற்பாடு செய்தவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகக் பொலிஸ் தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி நேற்று (16) நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியில், சுகாதார விதிமுறைகளைக் கருத்திற்கொள்ளாது செயற்பட்டவர்கள் மற்றும் அதை ஏற்பாடு செய்தவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகக் பொலிஸ் தெரிவித்துள்ளது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட சில பிரச்சினைகளை மையப்படுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில், நேற்று (16) இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்திற்கு அருகில் ஆரம்பமான இந்தப் பேரணி, காலிமுகத்திடலை சென்றடைந்தது.
முன்னதாக குறித்து ஆர்ப்பாட்டப் பேரணி, ஹைட்பார்க்கில் இடம்பெறும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்திருந்த நிலையில், கொழும்பில் போராட்டம் நடத்துவதைத் தடுத்து உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிமன்றங்களில் கோரியிருந்தனர்.
சில நீதிமன்றங்கள் குறித்த ஆர்ப்பாட்டப் பேரணிக்குத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், கொழும்பு 5 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்றம் உள்ளிட்ட சில நீதிமன்றங்கள், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய அதனை முன்னெடுக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தன.
இவ்வாறான நிலையில், நேற்று (16) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பில், எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகக் காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.