வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று...

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று...

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (22) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. அதற்காக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் சபையில் இருக்குமாறு அரசாங்கமும் எதிர்க்கட்சியும் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு கடந்த 12ஆம் திகதி நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

 கடந்த 13 ஆம் திகதி தொடங்கிய இந்த விவாதத்தின் ஏழாவது நாள் இன்றாகும். வரவு செலவு திட்டத்தின் மீதான குழுநிலை விவாதம் நாளை (23) ஆரம்பமாகி அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை 16 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.

 வரவு செலவு திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. 

அதேவேளை , ஐக்கிய மக்கள் சக்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வரவு செலவு திட்டத்தின் எதிராக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளனர். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் நேற்று (21) பிற்பகல் கூடி, பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்க ஏகமனதாக தீர்மானித்ததாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

 மேலும் பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் நேற்று (21) கூடி வரவு செலவு திட்டத்தின் எதிராக வாக்களிக்கத் தீர்மானித்ததாக அந்தக் கட்சியின் சட்டத்துறை பணிப்பாளர் சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் தெரிவித்தார்.

 மேலும், இன்று (22) நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஏனைய கட்சிகள் அதற்கு ஆதரவாக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளன.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய

 👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇

 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.