இலங்கையை அச்சுறுத்தும் எலிக் காய்ச்சல் - 5,275 நோயாளிகள்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 இலங்கையை அச்சுறுத்தும் எலிக் காய்ச்சல் - 5,275 நோயாளிகள்.

2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இம் மாதம் 17 ஆம் திகதி வரை நாட்டில் 5,275 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 

ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 844 எலிக் காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ளதாக இப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த காலப் பகுதியில் இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான எலிக்காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

 இவர்களின் எண்ணிக்கை 706 ஆகும். மேலும் காலி மாவட்டத்தில் 643 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 600 பேரும், கேகாலை மாவட்டத்தில் 418 பேரும் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கை, எலிக் காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

 இவர்களின் எண்ணிக்கை 4. 2020 ஆம் ஆண்டில் 8,579 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இவ்வருடம் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சிறிதளவு குறைவடைந்துள்ளமையை காணக் கூடியதாக உள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 

https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.