பெற்றோலிய, துறைமுக, எரிசக்தி தொழிற்சங்கங்கள் டிசம்பர் 8 ஆம் திகதி போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானம்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 பெற்றோலிய, துறைமுக, எரிசக்தி தொழிற்சங்கங்கள் டிசம்பர் 8 ஆம் திகதி போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானம்.
பெற்றோலியம், துறைமுகம் மற்றும் எரிசக்தி துறைகளின் வளங்களையும் சேவைகளையும் பாதுகாக்கக் கோரி, எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதி கூட்டுப் போராட்டத்தை முன்னெடுக்க துறைமுக கூட்டு தொழிற்சங்கக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
பெற்றோலியம், துறைமுகம் மற்றும் எரிசக்தி துறைகளின் வளங்களையும் சேவைகளையும் பாதுகாக்கக் கோரி, எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதி கூட்டுப் போராட்டத்தை முன்னெடுக்க துறைமுக கூட்டு தொழிற்சங்கக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி நண்பகல் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
எதிர்ப்பு பேரணியாக ஜனாதிபதி மாளிகையைச் சென்றடைந்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் மனு ஒன்றை கையளிக்கவுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
துறைமுகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியமான 13 ஏக்கர் நிலத்தை சீன நிறுவனத்துக்கு விற்பனை செய்ய தற்போதைய நிர்வாகம் தாக்கல் செய்த அமைச்சரவைப் பத்திரத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதே போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் இலங்கை மின்சார சபை ஊழியர்கள், அனைத்து தொழிற்சங்கங்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடத் தயங்க மாட்டார்கள் என அகில இலங்கை துறைமுக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளரான நிரோஷன் கோரகனகே தெரிவித்துள்ளார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன் #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.