எதிர்வரும் தினங்களில் முக்கிய 5 அம்சங்களுடன் Whatsapp

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 எதிர்வரும் தினங்களில் முக்கிய 5 அம்சங்களுடன் Whatsapp

புகைப்படங்களை எடிட் செய்து கொள்ளும் வசதிகள், ஸ்டிக்கர்களை உருவாக்கும் வசதி என முக்கிய 5 அம்சங்களை வாட்ஸ்அப், விரைவில் அறிமுகப்படுத்தபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 இதன்படி ,உலக அளவிலும் பல கோடி மக்கள் நாளாந்தம் பயன்படுத்தும் ஒரு செயலியாக வாட்ஸ்அப் இருந்து வருகிறது. வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கிய பின்னர் வாட்ஸ்அப்பில் பல்வேறு அப்டேட்களை அந்த நிறுவனம் வழங்கி வருகிறது.

 வாட்ஸ்அப்பில் பாதுகாப்பு வசதியை அதிகரிக்கும் நோக்கிலும் பயனாளிகளை கவரும் விதத்திலும் புதிய அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. 

இந்த வகையில் வாட்ஸ் அப் செயலியில் விரைவில் வரவிருக்கும் சில முக்கிய அப்டேட்டுகள் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

 அதன்படி, வாட்ஸ் அப் செயலியில் மெசேஜ்களை டெலிட் செய்வதற்கான டைம் லிமிட் விரைவில் அதிகரிக்கப்பட உள்ளது. அதாவது குரூப்பில் அனுப்படும் மெசேஜ்களை டெலிட் செய்வதற்கான கால அவகாசம் தற்போது 1 மணிநேரம் 8 நிமிடமாக உள்ள நிலையில், விரைவில் இது ஒரு வாரமாக அதிகரிக்கபட உள்ளதாக கூறப்படுகின்றது. 

மேலும் ,இதுதவிர ஆடியோ மெசேஜ்களை பாஸ்ட் பார்வர்டு செய்து கேட்கும் வசதி சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

 அதன்படி 2 மடங்கு வரை ஸ்பீடை அதிகரித்து ஆடியோ மெசேஜ்களை பாஸ்ட் பார்வர்டு செய்யலாம். விரைவில் இதன் ஸ்பீடை 2 மடங்குக்கு மேல் அதிகரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 

https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.