வரலாற்றில் இன்று டிசம்பர் 02.2021

 வரலாற்றில் இன்று டிசம்பர் 02.2021


திசம்பர் 2  கிரிகோரியன் ஆண்டின் 336 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 337 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 29 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்.

👉1409 – லீப்சிக் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

👉1697 – இலண்டனில் புனித பவுல் பேராலயம் திறக்கப்பட்டது.

👉1804 – நோட்ரே டேம் டி பாரிசில் நெப்போலியன் பொனபார்ட் பிரான்சின் பேரரசனாகத் தனக்குத்தானே முடிசூடினான்.

👉1805 – நெப்போலியனின் தலைமையில் பிரான்சியப் படையினர் ஓஸ்டர்லிட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் உருசிய-ஆத்திரியக் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தனர்.

👉1823 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் மன்ரோ ஐரோப்பிய சர்ச்சைகளில் அமெரிக்கா நடுநிலைமை வகிக்கும் என அறிவித்தார், அதேவேளையில் ஐரோப்பிய அரசுகள் அமெரிக்காக்களில் தலையிடக்கூடாது எனவும் எச்சரித்தார்.

👉1843 – யாழ்ப்பாணத்தில் கடும் சூறாவளி வீசியதில் பலத்த அழிவுகள் ஏற்பட்டன.[1]

👉1848 – முதலாம் பிரான்சு யோசப்பு ஆத்திரியாவின் பேரரசராக முடிசூடினார்.

👉1851 – புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரெஞ்சு அரசுத்தலைவர் லூயி-நெப்போலியன் பொனபார்ட் பிரான்சின் இரண்டாம் குடியரசைக் கலைத்தார்.

👉1852 – மூன்றாம் நெப்போலியன் பிரான்சின் பேரரசராக முடிசூடினார்.

👉1859 – அடிமை ஒழிப்பு செயற்பாட்டாளரும் போராளியுமான ஜான் பிரவுன் மேற்கு வர்ஜீனியாவில் அக்டோபர் 16 இல் நடத்திய முற்றுகைக்காக தூக்கிலிடப்பட்டார்.

👉1908 – பூயி தனது இரண்டாவது அகவையில் சீனாவின் பேரரசனாக முடிசூடினான்.

👉1942 – மன்காட்டன் திட்டம்: என்ரிக்கோ பெர்மி தலைமையிலான குழு செயற்கையாகத் தானே தொடருமாறு நிகழும் அணுக்கரு தொடர்வினையை ஆரம்பித்தது.

👉1943 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியின் பாரி துறைமுகத்தில் இடம்பெற்ற வான்தாக்குதலில் அமெரிக்கக் கப்பல் ஒன்று உட்படப் பல கப்பல்கள் மூழ்கின.

👉1946 – பிரித்தானிய அரசாங்கம் நேரு, பால்தேவ் சிங், ஜின்னா, லியாகத் அலி கான் ஆகிய தலைவர்களை இந்தியாவின் சட்ட சபையைப் பிரதிநிதித்துவப்படுத்த அழைத்தது.

👉1947 – பாலத்தீனத்தை இரண்டாகப் பிரிக்க ஐநா திட்டம் அறிவிக்கப்பட்டதை அடுத்து எருசலேமில் கலவரம் மூண்டது.

👉1950 – கொரியப் போர்: வட கொரியாவிலிருந்து ஐநா படையினர் முற்றாக விலக்கப்பட்டனர்.

👉1954 – சீனக் குடியரசுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பாதுகாப்பு உடன்பாடு வாசிங்டனில் கையெழுத்திடப்பட்டது.

👉1956 – பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா மற்றும் ஆதரவாளர்களும் கியூபா புரட்சியை முன்னெடுப்பதற்காக கிரான்மா என்ற படகில் கியூபாவை சென்றடைந்தனர்.

👉1961 – பிடெல் காஸ்ட்ரோ தன்னை ஒரு மார்க்சிச-லெனினிசவாதி எனவும் கியூபா கம்யூனிச நாடாக இருக்கும் எனவும் அறிவித்தார்.

👉1970 – ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் ஆரம்பமானது.

👉1971 – சோவியத்தின் செவ்வாயை நோக்கி ஏவப்பட்ட மார்ஸ் 2 விண்கலம் தரையிறங்கி ஒன்றை அங்கு இறக்கியது. இது வெற்றிகரமாகத் தரையிறங்கினாலும், தொடர்புகளை இழந்தது. செவ்வாயில் மெதுவாகத் தரையிறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.

👉1971 – அபுதாபி, அஜ்மான், புஜைரா, சார்ஜா, துபாய், உம் அல்-குவைன் ஆகிய நாடுகள் ஐக்கிய அரபு அமீரகம் என்ற பெயரில் இணைந்தன.

👉1975 – பத்தே லாவோ என்பவர் லாவோசின் தலைநகர் வியஞ்சானைக் கைப்பற்றி, லாவோ மக்கள் சனநாயகக் குடியரசை அமைத்தார்.

👉1976 – பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

👉1980 – எல் சல்வடோரில் நான்கு அமெரிக்கக் மதப்பரப்புனர்கள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

👉1982 – யூட்டா பல்கலைக்கழகத்தில் உலகின் முதலாவது செயற்கை இதயம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.

👉1984 – ஒதியமலைப் படுகொலைகள்: முல்லைத்தீவு மாவட்டம், ஒதியமலை கிராமத்தில் இலங்கை இராணுவத்தினரால் 32 தமிழ் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

👉1988 – பெனசீர் பூட்டோ பாகித்தானின் முதல் பெண் பிரதமரானார்.

👉1989 – மலேசிய – தாய்லாந்து அரசுகளுக்கும் மலாயக் கம்யூனிஸ்டுக் கட்சிக்கும் இடையில் இடம்பெற்ற அமைதி ஒப்பந்தத்தை அடுத்து மலேசியக் கம்யூனிசக் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.

👉1990 – ஒன்றுபட்ட செருமனியில் 1932 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் எல்முத் கோல் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.

👉1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்ற உக்ரைனை கனடாவும் போலந்தும் முதல் நாடுகளாக அங்கீகரித்தன.

👉1993 – கொலம்பியாவின் போதைப்பொருள் கடத்தல் தலைவன் பப்லோ எசுகோபர் மெதெயின் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

👉1993 – ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியைத் திருத்தும் நோக்கோடு நாசாவின் எண்டெவர் விண்ணோடம் விண்ணுக்கு ஏவப்பட்டது.

👉1995 – யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கை இராணுவத்திடம் வீழ்ச்சி அடைந்தது.

👉1999 – பெல்பாஸ்ட் உடன்பாடு: ஐக்கிய இராச்சியம் வட அயர்லாந்தில் அரசியலதிகாரப் பகிர்வுக்கு ஒப்புக் கொண்டது.

👉2002 – இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஒஸ்லோவில் ஆரம்பமாயின.

👉2006 – பரிதிமாற் கலைஞரின் நூல்கள் தமிழக அரசினால் நாட்டுடமை ஆக்கப்பட்டன.

👉2006 – பீகார் மாநிலத்தின் பகல்பூரில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் அதன் வழியாகச் சென்ற கடுகதித் தொடருந்து வண்டி விபத்துக்குள்ளாகியதில் 35 பேர் கொல்லப்பட்டனர்.

👉2016 – கலிபோர்னியா, ஓக்லாந்தில் களஞ்சியச் சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர்.

இன்றைய தின பிறப்புகள்.

👉1859 – யோர்ச் சோரா, பிரான்சிய ஓவியர் (இ. 1891)

👉1880 – க்ஷிதி மோகன் சென், வங்காள எழுத்தாளர், கல்வியாளர் (இ. 1960)

👉1885 – ஜார்ஜ் மினாட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (இ. 1950)

👉1912 – நாகிரெட்டி, திரைப்படத் தயாரிப்பாளர், பத்திரிகையாளர் (இ. 2004)

👉1930 – கேரி பெக்கர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 2014)

👉1933 – கி. வீரமணி, திராவிடர் கழகத் தலைவர்

👉1937 – மனோகர் ஜோஷி, மகாராட்டிராவின் 15வது முதலமைச்சர்

👉1946 – டேவிட் மெக்காலே, ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர்

👉1960 – சில்க் ஸ்மிதா, தென்னிந்திய நடிகை (இ. 1996)

👉1963 – சிவா ஐயாதுரை, இந்திய-அமெரிக்க கணினி அறிவியலாளர், தொழிலதிபர்

👉1963 – நெப்போலியன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி

👉1973 – மோனிக்கா செலசு, செர்பிய-அமெரிக்க டென்னிசு வீராங்கனை

👉1978 – நெல்லி ஃபர்ட்டடோ, கனடியப் பாடகி, நடிகை

👉1981 – பிரிட்னி ஸ்பியர்ஸ், அமெரிக்கப் பாடகி, நடிகை

👉1982 – முருகதாசன், தீக்குளித்து இறந்த ஈழத்தமிழன் (இ. 2009)

இன்றைய தின இறப்புகள்.

👉1547 – எர்னான் கோட்டெஸ், எசுப்பானிய தேடலறிஞர் (பி. 1485)

👉1594 – கிரார்துசு மெர்காதோர், பிளெமிய கணிதவியலாளர், நிலப்படவரைவாளர் (பி. 1512)

👉1881 – ஜென்னி வான் வெசுட்பலென், செருமானிய எழுத்தாளர், கார்ல் மார்க்சின் மனைவி (பி. 1814)

👉1911 – பாண்டித்துரைத் தேவர், தமிழறிஞர் (பி. 1867)

👉1933 – எஸ். ஜி. கிட்டப்பா, நாடக நடிகர், பாடகர் (பி. 1906)

👉1971 – வீ. கே. வெள்ளையன், இலங்கைத் தொழிற்சங்கவாதி, மலையக அரசியல்வாதி (பி. 1918)

👉1973 – வை. பொன்னம்பலம், தமிழ்ப் புலவர், தமிழாசிரியர் (பி. 1904)

👉1985 – பிலிப் லர்கின், ஆங்கிலேயக் கவிஞர், நூலாசிரியர் (பி. 1922)

👉1987 – யாகோவ் போரிசோவிச் செல்டோவிச், பெலருசிய இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1914)

👉1993 – பப்லோ எசுகோபர், கொலம்பியாவின் போதைக் கடத்தல் குழுத் தலைவர் (பி. 1949)

👉2002 – ஐவன் ஈலிச், ஆத்திரியப் போதகர், மெய்யியலாளர் (பி. 1926)

👉2008 – மு. கு. ஜகந்நாதராஜா, பன்மொழிப் புலவர் (பி. 1933)

👉2014 – ஏ. ஆர். அந்துலே, மகாராட்டிராவின் 8வது முதலமைச்சர் (பி. 1929)

👉2015 – எம். ஏ. எம். ராமசாமி, இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி (பி 1931)

👉2016 – கோ. சி. மணி, தமிழக அரசியல்வாதி (பி. 1929)

இன்றைய தின சிறப்பு நாள்.

👉பன்னாட்டு அடிமை முறை ஒழிப்பு நாள்.

👉ஐக்கிய அமீரகத் தேசிய நாள்

👉தேசிய நாள் (லாவோஸ்)

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.