வரலாற்றில் இன்று டிசம்பர் 12.2021

 வரலாற்றில் இன்று டிசம்பர் 12.2021


திசம்பர் 12  கிரிகோரியன் ஆண்டின் 346 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 347 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 19 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்.

👉627 – பைசாந்திய இராணுவம் எராகிளியசு தலைமையில் நினேவா சமரில் பாரசீகப் படைகளைத் தோற்கடித்தன.

👉884 – மேற்கு பிரான்சிய மன்னர் இரண்டாம் கார்லமோன் வேட்டையாடும் போது நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார்.

👉1098 – முதலாம் சிலுவைப் போர்: சிரியாவின் மாரட்-அல்-நூமன் நகரை திருத்தந்தை இரண்டாம் ஏர்பனின் படைகள் தாக்கி 20,000 பொதுமக்களைக் கொன்றனர்.

👉1787 – பென்சில்வேனியா ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது மாநிலமாக இணைந்தது.

👉1812 – உருசியாவின் மீதான பிரெஞ்சுப் படையெடுப்பு முடிவடைந்தது.

👉1815 – பிரித்தானியப் படைகள் கண்டியை அடைந்தன.[1]

👉1817 – நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர் லக்லான் மக்குவாரி ஆஸ்திரேலியா என்ற பெயரை காலனித்துவ அரசுக்கு பரிந்துரைத்தார்.

👉1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: யாசூ ஆற்றில் ஐக்கிய அமெரிக்காவின் கைரோ என்ற ஆயுதம் தாங்கிக் கப்பல் கண்ணிவெடியில் சிக்கி மூழ்கியது.

👉1866 – இங்கிலாந்தில் ஓக்சு என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க விபத்தில் 361 சுரங்கத் தொழிலாளர்கள், மற்றும் மீட்புப் பணியாளர்கள் இறந்தனர்.

👉1871 – யாழ்ப்பாணத்தில் முழுமையான கதிரவ மறைப்பு அவதானிக்கப்பட்டது. இங்கிலாந்தின் வானியலாளர் நோர்மன் லொக்கியர் தலைமையில் ஒரு அறிவியலாளர் குழு இதனைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் வந்தது.[2]

👉1901 – அத்திலாந்திக் பெருங்கடலூடாக இங்கிலாந்தில் இருந்து கனடாவின் நியூபின்லாந்தில் செயின்ட் ஜான்சு வரையான முதலாவது வானொலி சமிக்கையை (மோர்சு தந்திக்குறிப்பில் “S” [***] எழுத்து) மார்க்கோனி பெற்றார்.

👉1911 – இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவில் இருந்து தில்லிக்கு மாற்றப்பட்டது.

👉1911 – ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்தியாவின் பேரரசராக முடிசூடினார்.

👉1923 – இத்தாலியில் போ ஆற்றின் அணைக்கட்டு வெடித்ததில் 600 பேர் உயிரிழந்தனர்.

👉1925 – ரேசா கான் ஈரானின் புதிய மன்னராக (ஷா) முடிசூடினார். ஈரானில் பகலவி வம்சம் ஆரம்பமானது.

👉1936 – சீனக் குடியரசின் படைத்துறைத் தலைவர் சங் கை செக் கடத்தப்பட்டார்.

👉1937 – இரண்டாம் சீன-சப்பானியப் போர்: சப்பானியப் போர் விமானம் அமெரிக்காவின் பனாய் பீரங்கிப் படகை சீனாவில் யாங்சி ஆற்றில் மூழ்கடித்தது.

👉1939 – இசுக்காட்லாந்தில் இரண்டு கப்பல்கள் மோதியதில் 124 பேர் உயிரிழந்தனர்.

👉1939 – பனிக்காலப் போர்: பின்லாந்துப் படைகள் சோவியத் படைகளை டொல்வஜார்வி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன.

👉1940 – இரண்டாம் உலகப் போர்: இங்கிலாந்தின் செபீல்டு நகரில் உணவுவிடுதி ஒன்றின் மீது ஜேர்மனிய விமானக்கள் குண்டு வீசியதில் 70 பேர் கொல்லப்பட்டனர்.

👉1941 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா பல்கேரியாவின் மீதும், [ஆங்கேரி]], [ஔருமேனியா]] ஆகியன ஐக்கிய அமெரிக்கா மீதும், இந்தியா, சப்பான் மீதும் போரை அறிவித்தன.

👉1941 – யூதர்களை வெளியேற்றும் திட்டத்தை இட்லர் அறிவித்தார்.

👉1942 – நியூபின்லாந்தில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் 100 பேர் உயிரிழந்தனர்.

👉1948 – மலாயா அவசரகாலம்: பத்தாங்காலி படுகொலைகள்: மலாயாவில் நிலை கொண்டிருந்த இசுக்கொட்லாந்து படையினர் 14 பேர் பத்தாங்காலி என்ற கிராமத்தில் உள்ளூர்ப் பொதுமக்கள் 24 பேரைக் கொன்று கிராமத்தைத் தீ வைத்து எரித்தனர்.

👉1956 – யப்பான் ஐக்கிய நாடுகளில் இணைந்தது.

👉1963 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கென்யா விடுதலை பெற்றது.

👉1979 – சிம்பாப்வே-ரொடீசியா தெற்கு ரொடீசியா என்ற பெயரில் பிரித்தானியாவின் ஆதிக்கத்தில் மீண்டும் வந்தது.

👉1979 – கொலம்பியா, எக்குவடோர் நாடுகளில் இடம்பெற்ற 8.2 Mw அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 300–600 பேர் வரையில் உயிரிழந்தனர்.

👉1984 – மவுரித்தேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் முகமது கவுனா ஹைடாலா பதவி அகற்றப்பட்டு மாவோவுயா சிட்’அகமது டாயா புதிய அரசுத்தலைவரானார்.

👉1985 – கனடாவின் நியூபின்லாந்தில் ஐக்கிய அமெரிக்காவின் 248 இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற டக்ளஸ் டிசி-8 விமானம் விபத்துக்குள்ளாகியதில் அமெரிக்க இராணுவத்தினர் 236 பேர் உட்பட அதில் பயணஞ்செய்த அனைத்து 256 பேரும் கொல்லப்பட்டனர்.

👉1988 – இலண்டனில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 35 பேர் உயிரிழந்து 100 பேருக்கு மேல் காயமடைந்தனர்.

👉1991 – உருசியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

👉1997 – களுத்துறை சிறைச்சாலைப் படுகொலைகள்: இலங்கையின் களுத்துறை சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியற் கைதிகள் சிங்களக் கைதிகளினால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

👉2012 – வட கொரியா முதலாவது செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது.

இன்றைய தின பிறப்புகள்.

👉1621 – ஜெரார்டு பீட்டர்சு அல்ஃப்ட், டச்சு இராணுவத் தளபதி (இ. 1656)

👉1803 – ஜேம்ஸ் சால்லிஸ், ஆங்கிலேய வானியலாளர் (இ. 1882)

👉1863 – எட்வர்ட் மண்ச், நோர்வே ஓவியர் (இ. 1944)

👉1915 – பிராங்க் சினாட்ரா, அமெரிக்கப் பாடகர், நடிகர் (இ. 1998)

👉1922 – ராஜா செல்லையா, இந்தியப் பொருளாதார நிபுணர் (இ. 2009)

👉1927 – ராபர்ட் நாய்சு, அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், இன்டெல் நிறுவனத்தை ஆரம்பித்தவர் (இ. 1990)

👉1928 – சிங்கிஸ் ஐத்மாத்தவ், கிர்கித்தான் எழுத்தாளர் (இ. 2008)

👉1931 – சௌகார் ஜானகி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

👉1932 – ஆலங்குடி சோமு, தமிழகத் திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் (பி. 1990)

👉1940 – சரத் பவார், இந்திய அரசியல்வாதி

👉1941 – ராகவன், மலையாளத் திரைப்பட நடிகர்

👉1949 – கோபிநாத் முண்டே, இந்திய அரசியல்வாதி (இ. 2014)

👉1949 – பில் நை, ஆங்கிலேய நடிகர்

👉1950 – ரஜினிகாந்த், தென்னிந்திய நடிகர், தயாரிப்பாளர்

👉1950 – எரிக் மாஸ்க்கின், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்

👉1962 – டிரேசி ஆஸ்டின், அமெரிக்க தென்னிசு ஆட்ட வீரர்

👉1969 – சுப்பிரமணியம் சுகிர்தராஜன், இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் (இ. 2006)

👉1970 – ஜெனிஃபர் கானலி, அமெரிக்க நடிகை

👉1970 – சேரன் (திரைப்பட இயக்குநர்), தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், நடிகர்

👉1981 – யுவராஜ் சிங், இந்தியத் துடுப்பாட்ட வீரர்

👉1981 – அசோக், தமிழகத் திரைப்பட நடிகர்

இன்றைய தின இறப்புகள்.

👉1843 – நெதர்லாந்தின் முதலாம் வில்லியம் (பி. 1772)

👉1921 – என்றியேட்டா லீவிட், அமெரிக்க வானியலாளர் (பி. 1868)

👉1939 – டக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ், அமெரிக்க நடிகர் (பி. 1883)

👉1940 – தியாகி விஸ்வநாததாஸ், நாடக நடிகர், தேசியவாதி (பி. 1886)

👉1964 – மைதிலி சரண் குப்த், இந்தியக் கவிஞர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1866)

👉1995 – ஆர். ராமநாதன் செட்டியார், இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி (பி. 1913)

👉2004 – ஜேம்ஸ் ராம்ஸ்போதம், யாழ்ப்பாணம் யோகசுவாமிகளின் துறவுச் சீடர் (பி. 1915)

👉2006 – இ. இரத்தினசபாபதி, ஈழப்போராட்ட இயக்கங்களில் ஒன்றான ஈரோசு என்ற அமைப்பை ஆரம்பித்தவர் (பி. 1938)

👉2012 – நித்தியானந்த சுவாமி, உத்தராகண்ட மாநிலத்தின் 1-வது முதலமைச்சர் (பி. 1927)

👉2013 – அப்துல் காதிர் முல்லா, வங்காளதேச அரசியல்வாதி (பி. 1948)

👉2016 – ஈ. ஆர். பிரைத்வெயிட், கயானா-அமெரிக்கப் புதின எழுத்தாளர் (பி. 1912)

இன்றைய தின சிறப்பு நாள்.

👉விடுதலை நாள் (கென்யா, பிரித்தானியாவிடம் இருந்து 1963)

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.