இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! - தூதுவர்களிடம் பிரதமர் மஹிந்த கோரிக்கை! (இராஜதுரை ஹஷான்)
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! - தூதுவர்களிடம் பிரதமர் மஹிந்த கோரிக்கை! (இராஜதுரை ஹஷான்)
இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பை தொடர்ந்து எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களிடமும் உயர்ஸ்தானிகர்களிடமும் குறிப்பிட்டார்.
இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பை தொடர்ந்து எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களிடமும் உயர்ஸ்தானிகர்களிடமும் குறிப்பிட்டார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவுக்கும் இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்களுக்கும் உயர்ஸ்தானிகர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (30) இரவு கொழும்பில் இடம்பெற்றது.
வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ .எல் பீரிஸின் அழைப்புக்கமைய இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தவும், நாட்டு மக்களை பாதுகாக்கவும் அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளை தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் பாராட்டினார்கள்.
இலங்கைக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு நல்லுறவை பலப்படுத்தல், அவற்றை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் ஊடாக இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்து தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் இச்சந்திப்பின்போது யோசனைகளை முன்வைத்தார்கள்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94715505714&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇
https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.