காரணமின்றி பண வைப்பு செய்தால் வங்கிக் கணக்குகள் தடை செய்யப்படும்: மத்திய வங்கியின் ஆளுநர் அதிரடி அறிவிப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 காரணமின்றி பண வைப்பு செய்தால் வங்கிக் கணக்குகள் தடை செய்யப்படும்: மத்திய வங்கியின் ஆளுநர் அதிரடி அறிவிப்பு. 


எவ்வித காரணமும் இன்றி ஒருவர் மற்றுமொரு நபரின் வங்கிக் கணக்கில் பணத்தை வைப்புச் செய்தால், அது பற்றி தேடி அறிய நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivard Cabraal) தெரிவித்துள்ளார்.

 கொழும்பில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். பணச் சலவைச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 இவ்வாறான வங்கிக் கணக்கை தடை செய்யும் அதிகாரமும் இலங்கை மத்திய வங்கிக்கு இருக்கின்றது எனவும் கப்ரால் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே வெளிநாடுகளில் தொழில் புரிவோருக்கும் கப்ரால் விசேட அறிவிப்பை வழங்கியுள்ளார்.

 உத்தியோகபூர்வமாக வங்கி சேவைகளை பயன்படுத்தி மாத்திரம் வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு பணத்தை அனுப்புமாறு ஆலோசனை வழங்கியுள்ளார். 

வெளிநாடுகளில் இருந்து வரும் பணம் சம்பந்தமாக தற்போது, மிக துல்லியமான முறையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் மத்திய வங்கியியின் ஆளுநர் கூறியுள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.