எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொரோனா நிலைமை தீவிமடையலாம் – சுகாதார பிரிவு எச்சரிக்கை.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
எமது நாட்டில் கொரோனா நோய் நிலைமை நிரந்தர நிலைமையை அடைந்துள்ளது. கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் பெரும் அதிகரிப்பு ஏற்படுவதாகவும் தெரியவில்லை, வீழ்ச்சியடைவதாகவும் தெரியவில்லை.
இருந்தபோதிலும், நாளாந்தம் 500 அல்லது 700 போ் வரையில் கொரோனா நோயாளர்களாக அடையாளம் காணப்படுவதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனா்.
இவ்வாறு நோயாளர்கள் நாளொன்றுக்கு 500, 700 போ் வரையில் சமூகத்தில் நடமாடுவதன் மூலம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொரோனா நோய்நிலைமை அதிரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளா் வைத்தியர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளாா்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, மக்களின் செயற்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த நிலைமை தங்கியுள்ளது.
அதேபோன்று, ஒமிக்ரோன் என்ற புதிய திரிபு தொடர்பில் கவனம் செலுத்தும்போது, எமது நாட்டிலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளாா்.
அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படுகின்றது. ஆகவே, இந்த புதிய திரிபு எமது நாட்டிலும் பரவலடைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறன.
டெல்ட்டாவை போன்று விரைவில் பரவலடைய கூடிய தன்மை இந்த ஒமிக்ரோன் திரிபுக்கும் இருக்கிறது. இந்த திரிபு நாட்டில் பரவலடைய ஆரம்பித்து பெருமளவு மக்கள் பாதிப்படைந்தால் நாடு பெரும் நெருக்கடி நிலையை சந்திக்க நேரிடிடும்.
இந்த தொற்றின் பரவல் நிலை தொடர்பில் எந்த சரியான தகவல்களும் இல்லாததால் சவாலை எதிர்கொள்வதற்கான சகல ஆயத்தங்களையும் சுகாதார திணைக்களம் மேற்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளாா்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇
https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.