மீண்டும் நெருக்கடியில் எரிவாயு விநியோகம்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

மீண்டும் நெருக்கடியில் எரிவாயு விநியோகம். 


நாட்டில் எரிவாயு விநியோகத் தில் மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளதுடன் பல பகுதிகளில் லாஃப்ஸ் எரிவாயு கிடைக்கவில்லை என்று நுகர்வோர் கூறுகின்றனர்.

 லிட்ரோ நிறுவனம் புதிய நியமங்களின் கீழ் சந்தைக்கு எரிவாயுவை விநியோகித்தாலும், நுகர்வோர் பழைய கையிருப் பில் கொள்வனவு செய்யப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை கொண்டு வருவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 டிசம்பர் 4 ஆம் திகதிக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட எரிவாயு சிலிண்டர்களுக்குப் பதிலாக புதிய சிலிண்டர்களை வழங்குமாறு சில நாட்களுக்கு முன்னர் நுகர்வோர் விவகார அதிகார சபை லிட்ரோ நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. 

எனினும், சந்தைக்கு லாஃப்ஸ் எரிவாயு விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக சீல் வைக்கப்படாத பிரச்சினைக் குரிய எரிவாயு சிலிண்டர்களை மாற்றுவதற்காக வாடிக்கையா ளர்கள் கொண்டு வந்த போது புதிய சிலிண்டரை வழங்க வாடிக்கையாளர்களிடம் கால அவகாசம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 இது தொடர்பில் லிட்ரோ நிறுவனத்திடம் ஏற்கனவே வினவப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் எரிவாயு தொடர்பான சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகி வருகின்றன. 

ஹட்டன் கொட்டலகல தோட்டத் திலுள்ள வீடொன்றில் இன்று (12) காலை எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாங்கப்பட்ட எரிவாயு சிலிண் டரே வெடித்துச் சிதறியுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

 👉எமது #Whatsapp குழுவில் இணைய

 👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL

 👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.