“ஒமிக்ரோன்” பற்றி உங்களுக்கு தெரியுமா?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 “ஒமிக்ரோன்” பற்றி உங்களுக்கு தெரியுமா?

நாங்கள் கொவிட்-19க்கு எதிராக கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக போராடி வருகின்றோம், இந்த நேரத்தில் முதன் முதலில் உருவான வைரஸ் காலப்போக்கில் விகாரமடைந்து பல்வேறு திரிபுகளை உருவாக்குகின்றன என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 மேலும், கொவிட் -19 நோய்த் தொற்று பரவுவதற்கு ஏற்ற சூழ்நிலைகளில் இத்தகைய திரிபுகள் உருவாக அதிக வாய்ப்புக்கள் காணப்படுகின்றன என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

 இதன் விளைவாக உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் விசேட நிபுணர்களின் அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து தடுப்பூசிகள் மற்றும் வேறு வசதிகளின் சமமான விநியோகத்தின் முக்கியத்துவத்தை மீண்டும், மீண்டும் வலியுறுத்துகின்றனர் மற்றும் “எல்லோரும் பாதுகாப்பாக இருக்கும் வரைக்கும் எவரும் பாதுகாப்பாக இருக்கமுடியாது” என்பதை நமக்கு ஞாபகப்படுத்துகின்றனர்.

 துரதிர்ஷ்டவசமாக குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் மற்றும் கண்டங்கள் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதில் குறிப்பிடத்தக்க தாமதம் ஏற்பட்டுள்ளது, உலகத்தில் ஆபிரிக்க நாடுகளிலேயே மிகக் குறைந்தளவான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன அத்துடன் அந்த நாடுகள் அதிக ஆபத்தான கட்டங்களை எதிர்நோக்கி உள்ளன.

 எனவே தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரோன் (B.1.1.529) என்ற புதிய திரிபு, உலகம் முழுவதும் அவ்வப்போது ஏற்;படும் ஆபத்தான கொவிட் -19 தொற்று அலைகளுக்கு காரணமான கொவிட் -19 வைரஸின் திரிபுகளான அல்பா, பீற்றா, காமா மற்றும் டெல்ற்றா “கருத்தில் கொள்ளப்பட்ட திரிபுகள்” போன்ற வகைகளுடன் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

 இந்த புதிய வகையான திரிபு கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து தென்னாபிரிக்காவின் அனைத்துப் பகுதிகளிலும் கொவிட்-19 தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகின்றது. 

கொவிட்-19 திரிபான ஒமிக்ரோன் முதன் முதலில் கார்த்திகை மாதம் 09ஆம் திகதி 2021ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் இப்போது பொட்ஸ்வானா, பெல்ஜியம், ஹொங்காங், இஸ்ரேல் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் போன்ற நாடுகளில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளார்கள் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கூடுதலாக, ஜெர்மனி மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளில் ஒமிக்ரோன் திரிபால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளிடையே மேலும் பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. 

ஒமிக்ரோன் திரிபால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முதல் நோயாளி எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பதும், நீண்டகாலமாக நோயெதிரப்பு சக்தி குறைபாடு நோய்க்கு தேவையான சிகிச்சையைப் பெறவில்லை என்பதும் இப்போது தெரியவந்துள்ளது. 

கொவிட் -19 வைரஸின் இந்தப் புதிய திரிபு வேகமாகப் பரவும் ஆற்றலைக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது முன்னர் கொவிட் -19 தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடத்தில் தொற்று நோய் காரணமாக இயற்கையாக உருவாக்கப்பட்ட நோயெதிரிப்புசக்தியையும் சவாலுக்கு உட்படுத்துகின்றது. 

இருப்பினும், தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளினால் ஒமிக்ரோன் திரிபிற்கு எதிரான தாக்கத்தை மதிப்பிடுவதற்கு விஞ்ஞான ரீதியிலான ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றது. 

மற்றைய திரிபுகளுடன் ஒப்பிடும் போது ஒமிக்ரோனின் மரபணுவில் அதிக எண்ணிக்கையான விகாரங்கள் உள்ளதாக இந்த துறையில் உள்ள விசேட நிபுணர்கள் நம்புகின்றனர். ஒரு நாடாக மூன்று கொவிட் - 19 அலைகளை எதிர்கொண்ட அனுபவத்தையும், நாட்டில் ஏற்பட்ட டெல்ற்றா திரிபின் விரைவான பரவலையும் ஞாபகப்படுத்தி பார்ப்பது மிகவும் முக்கியமானது அத்துடன் கொவிட்- 19 டெல்ற்றா திரிபை நாட்டின் சுகாதார துறையில் எவ்விதமான பாதிப்பும் ஏற்படாமல் நிர்வகிக்கப்பட்டது.

 எவ்வகையான திரிபுகளாக இருந்தாலும், இருவர்களுக்கிடையிலான உடற் தூரத்தை பேணுதல், வீட்டில் இருந்து வெளியேறும் போது முகக் கவசத்தை சரியாக அணிதல், வழக்கமான முறையில் கைகளை கழுவுதல் போன்ற அடிப்படையான கொவிட் -19 முன்னெச்சரிக்கை பழக்கவழக்கங்களை கண்டிப்பாக கடைப்பிடிப்பது நமது கடமையாகும். 

வேகமாக பரவி வரும் டெல்ற்றா திரிபு போன்ற கவனத்தில் கொள்ளக்;கூடிய திரிபுகளுக்கு எதிராக தடுப்பூசி மூலமே பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது, கொவிட் - 19 தொற்று நோய்க்கு எதிராக அதிகளவான தடுப்பூசி பயன்பாட்டில் உள்ள நாடுகளில், தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னர் எற்பட்ட இறப்புக்களை விட மிகக் குறைவாகவே இறப்புக்கள் பதிவாகியுள்ளன என்பது தெளிவாக தெரிகின்றது. 

முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களில் கொவிட் - 19 தொற்று நோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது 84% ஆக குறைக்கப்பட்டுள்ளது என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் முழுமையாக பெற்றுக் கொள்வதன் மூலம் கொவிட் - 19 வைரஸிலிருந்து எதிராக பாதுகாப்பை பெற்றுக் கொள்ளலாம் மற்றும் நீங்கள் மூன்றாவது டோஸ் பெற்றுக் கொள்ள தகுதியுடையவராக இருந்து அதனைப் பெற்றுக் கொள்வதன் மூலம் உங்கள் பாதுகாப்பின் அளவை மேலும் அதிகரித்து கொள்ளலாம். 

நெரிசலான, காற்றோட்டம் அற்ற மூடப்பட்ட இடங்களில் கொவிட் - 19 தொற்று நோய் பரவும் அபாயத்தை அதிகரிக்கின்றது. நெரிசல் மிக்க உணவகங்கள் மற்றும் நபர்கள் ஒரே நேரத்தில் ஒன்றாக உணவு உட்கொள்ளும் மூடப்பட்ட இடங்களில் நடைபெறும் திருமணங்கள் போன்ற இடங்களில் கொவிட் -19 வைரஸ் குறிப்பாக வேகமாக பரவுகிறது.

 அத்தகைய இடங்கள் மற்றும் நிகழ்வுகள் முடிந்தவரை தவிர்க்கப்பட வேண்டும் அல்லது குறைந்தபட்சம் நேரங்களை குறைப்பதன் மூலம் தொற்று பரவுவதை தவிரக்கலாம். வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் நாம் அனைவரும் இதை மனதில் நிறுத்தி செயற்படுவதன் மூலம் நாட்டில் உருவாகக்கூடிய கொவிட் -19 மிகப் பெரிய அலையினை குறைத்துக் கொள்ளலாம். 

பொறுப்பான குடிமக்கள் என்ற வகையில், சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதன் மூலமும் மற்றும் கொவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான விஞ்ஞான ரீதியிலான அணுகுமுறையை ஏற்றுக் கொள்வதன் மூலமும் இந்த சவால்களில் இருந்து நாம் நிச்சயமாக வெளிவர முடியும். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇

 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.