இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு!
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு!
இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மாத்திரம் 32 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவத்துள்ளது.
இந்தியாவில் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மாத்திரம் 32 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவத்துள்ளது.
அதனையடுத்து மருத்துவமனைகளில் ஒக்சிஜன் விநியோகம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அதேவேளை இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 8 ஆயிரத்து 39 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 47 இலட்சத்து 18 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இவர்களில் 3 கோடியே 41 இலட்சத்து 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேநேரம் 95 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 247 பேர் நேற்று ஒரேநாளில் உயிரிழந்துள்ள நிலையில்இ உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 76 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.