பொலிஸ் அதிகாரியை இழுத்துச் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

பொலிஸ் அதிகாரியை இழுத்துச் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்.

தப்பிச் செல்ல முயற்சித்த நபரின் மோட்டார் சைக்கிளில் இழுத்துப் பிடித்தவாறு சந்தேக நபரை போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்துள்ளார். 

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

மோட்டார் சைக்கிளை நிறுத்த முடியாத இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் வினவிய போது அதன் உரிமையாளர் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார். 

பொலிஸ் உத்தியோகத்தர் தப்பிச் சென்றவரின் மோட்டார் சைக்கிளை பின்புறமாக இழுத்து நிறுத்த முயற்சித்துள்ளார். எனினும் ஓட்டுனர் பொலிஸ் உத்தியோகத்தரை வீதியில் இழுத்துக்கொண்டு தப்பிச் சென்றார்.

 ஆனால் சுமார் எழுபது மீற்றர் சென்ற பின் குறித்த மோட்டார் சைக்கிள் மற்றுமொரு முச்சக்கர வண்டியுடன் மோதிக் கவிழ்ந்தது. 

சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாய மடைந்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக மேலதிக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.