எதிர்வரும் புதுவருட பண்டிகைகளை முன்னிட்டு விசேட காவல்துறை நடவடிக்கை.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
எதிர்வரும் புதுவருட பண்டிகைகளை முன்னிட்டு விசேட காவல்துறை நடவடிக்கை.
எதிர்வரும் நத்தார் மற்றும் புதுவருட பண்டிகைகளை முன்னிட்டு, மேல் மாகாணத்தில் விசேட காவல்துறை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நத்தார் மற்றும் புதுவருட பண்டிகைகளை முன்னிட்டு, மேல் மாகாணத்தில் விசேட காவல்துறை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக மேல் மாகாணத்தினுள் விசேட கடமைகளுக்காக காவல்துறையினரை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதற்கமைய ,போக்குவரத்தை கட்டுப்படுத்த, சுகாராத வழிமுறைகளை நடைமுறைப்படுத்த, மோசடியில் ஈடுபடும் வியாபாரிகளின் செயற்பாடுகள் மற்றும் முடிச்சுமாறிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காகவும் காவல்துறையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த வருடங்களின் அறிக்கைகளுக்கமைய, டிசம்பர் மாத கடைசி இரு வாரங்களும் நாட்டில் வாகன விபத்துக்கள் அதிகம் பதிவாகும் காலமாகும். மேலும் ,இதன் காரணமாக போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் குறித்தும் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.