பெண் ஒருவரை கொடூரமான முறையில் கொலை செய்து நகைகளை கொள்ளையிட்ட இருவர்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
பெண் ஒருவரை கொடூரமான முறையில் கொலை செய்து நகைகளை கொள்ளையிட்ட இருவர்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வர்த்தகர் ஒருவரின் மனைவியை கொலை செய்துவிட்டு அவரது நகைகளை கொள்ளையிட்டு சென்ற இருவர் பொதுமக்களினால் மட்டக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வர்த்தகர் ஒருவரின் மனைவியை கொலை செய்துவிட்டு அவரது நகைகளை கொள்ளையிட்டு சென்ற இருவர் பொதுமக்களினால் மட்டக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் மட்டக்களப்பு அரசடி, பார்வீதியில் உள்ள வீட்டிலேயே இந்த துயரச்சம்பவம் நடைபெற்றுள்ளது. குறித்த வீட்டுக்கு வழமையாக வருகைதந்து வேலைகள் செய்து விட்டுச்செல்லும் தகப்பனும் மகளுமே இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளது தொடர்பாக ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தகப்பனும் மகளும் பசிக்கிறது சாப்பாடு தாருங்கள் என்று கூறி குறித்த பெண்ணிடம் சாப்பாடு வாங்கி உண்ட பின்னரே இந்த கொலையினை செய்துள்ளனர்.
இன்று வீட்டுக்கு வந்தவர்கள் குறித்த வீட்டில் வேலைகளை செய்துவிட்டு உணவு உண்டுகொண்டிருக்கும்போது திடிரென குறித்த வீட்டின் உரிமையாளர் பெண் மீது கத்தியால் சரமாரியாக வெட்டுள்ளதுடன் கழுத்தை வெட்டிய பின் தாலிக்கொடியை பிய்த்துள்ளதுடன் காதுகளில் உள்ளவற்றை கழட்ட முடியாத நிலையில் அதனை வெட்டி எடுத்துச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இருவரும் குறித்த பெண்னை கொலைசெய்துவிட்டு அங்கிருந்த தங்க நகைகளை களவாடிச் சென்றபோது வீதியில் நின்றவர்கள் அவர்களின் உடைகளில் இரத்தக்கறை உள்ளதை கண்டு சந்தேகம் கொண்டு துரத்திச்சென்று இருவரையும் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தின்போது 50 வயதுடைய தயாவதி செல்வராஜா என்னும் பெண்ணே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதிக்கு வந்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்ட தடவியல் பிரிவு பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் காரணமாக குறித்த பகுதியில் பெருமளவு மக்கள் ஒன்றுகூடியதன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமையும் ஏற்பட்டுள்ளதை காணமுடிந்தது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.