சமையல் எரிவாயு வெடிப்பு – இதுவரை 7 பேர் உயிரிழப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 சமையல் எரிவாயு வெடிப்பு – இதுவரை 7 பேர் உயிரிழப்பு.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்களினால் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.

 எரிவாயு வெடிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் உறுப்பினரும், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான தேசபந்து தென்னக்கோன் இதனை தெரிவித்துள்ளார். 

குறித்த காலப்பகுதியில் எரிவாயு வெடிப்புடன் தொடர்புடைய 847 சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதுவரையில் எரிவாயு விபத்துக்களினால் 16 பேர் காயமடைந்துள்ளதுடன் சொத்துக்களுக்கு சேதமேற்பட்ட 18 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

இந்த ஆண்டில் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களில் 797 வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும், லாஃப் சிலிண்டர்களில் 50 வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.