ஏழு மாத குழந்தைக்கு தவறுதலாக கொரோனா தடுப்பூசி - எங்கு தெரியுமா?
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
ஏழு மாத குழந்தைக்கு தவறுதலாக கொரோனா தடுப்பூசி - எங்கு தெரியுமா?
தென் கொரியாவின் சியோங்னாம் பகுதியில் ஏழு மாத குழந்தைக்கு தவறுதலாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தென் கொரியாவின் சியோங்னாம் பகுதியில் ஏழு மாத குழந்தைக்கு தவறுதலாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதன்படி ,குறித்த குழந்தைக்கு ஆபத்துகள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், மருத்துவர்கள் மீது குழந்தையின் பெற்றோர் வழக்கு தொடுத்துள்ளனர்.
காய்ச்சல் தடுப்பூசிக்கு பதிலாக அங்கிருந்த டாக்டர்கள் மொடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை குழந்தைக்கு தவறுதலாக செலுத்தி விட்டனர். சற்று நேரத்துக்கு பின் இது தெரிய வந்தது.
பெற்றோர் மட்டுமின்றி டாக்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அதையடுத்து அந்தக் குழந்தை தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டது.
எந்தப் பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. பின், 'டிஸ்சார்ஜ்' செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். தங்கள் குழந்தைக்கு தவறுதலாக கொரோனா தடுப்பூசி செலுத்திய மருத்துவர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் எனக்கோரி குழந்தையின் பெற்றோர் வழக்கு தொடுத்துள்ளனர்.
மேலும் நெதர்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, டென்மார்க் உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே, 5 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.