ஒமைக்ரான் அறிகுறிகள் எப்படி இருக்கும்..?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 ஒமைக்ரான் அறிகுறிகள் எப்படி இருக்கும்..?

அறிகுறிகள் தென்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன ஒமைக்ரான் அறிகுறிகள். ஆரம்பத்தில் கொரோனா சளி, காய்ச்சல், வாசனை இழப்பு போன்ற பொதுவான அறிகுறிகளை மட்டுமே காண்பித்தது. அதன் பிறகுதான் தீவிரமடைந்து கண்டுபிடிக்க முடியாத வகையில் வெவ்வேறான அறிகுறிகளை காட்டியது. அதுபோலத்தான் ஒமைக்ரானும் இப்போது பொதுவான அறிகுறிகளையே காட்டுகிறது. ஒமைக்ரான் தாக்கம் மிதமானதாக இருக்கும் என்றுதான் இதுவரை கூறப்படுகிறது. இருப்பினும் வல்லுநர்களை அதை அசாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். பாதுகாப்பு விஷயங்களை கடுமையாக கடைப்பிடிப்பது அவசியம் என எச்சரிக்கின்றனர். சமீப நாட்களாக இந்தியாவிலும் ஒமைக்ரானின் வழக்குகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. ஒமைக்ரான் தாக்கியவர்களின் கூற்றுப்படி ஒரு சிலருக்கு மட்டுமே பொதுவான அறிகுறிகள் தென்படுகின்றன. சிலருக்கு இதுவரை இல்லாத அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இப்படி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறான அறிகுறிகளை காட்டுகிறது. அந்த வகையில் நீங்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டிய அறிகுறிகள் என்ன..? உடனே நீங்கள் செய்ய வேண்டியது என்ன..? என்பதை பற்றி பார்ப்போம். தொடர்புடைய செய்திகள் பொதுவான அறிகுறிகள் : உலக சுகாதார அமைப்பின் அறிக்கைப்படி ஏற்கெனவே வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை எளிதில் ஒமைக்ரான் தாக்கலாம். இரண்டு தடுப்பூசி போட்டவர்களையும் தாக்கலாம். global health agency கூற்றுப்படி ஒமைக்ரான் டெல்டா வேரியண்டை காட்டிலும் மிதமான தாக்கத்தையே உண்டாக்கும். ஒமைக்ரான் பாதித்தால் உண்டாகும் பொதுவான அறிகுறிகள் என்ன..? மிதமான காய்ச்சல் உடல் சோர்வு தொண்டை வலி, தொண்டை கரகரப்பு கடுமையான உடல் வலி ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களின் பதிவுகளின்படி கொரோனாவைப்போல் ஒமைக்ரான் பாதித்தால் சுவை இழப்பு, வாசனை இழப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. வேறுபட்ட அறிகுறிகள் என்னென்ன..? ஆரம்பத்தில் கொரோனா சளி, காய்ச்சல், வாசனை இழப்பு போன்ற பொதுவான அறிகுறிகளை மட்டுமே காண்பித்தது. அதன் பிறகுதான் தீவிரமடைந்து கண்டுபிடிக்க முடியாத வகையில் வெவ்வேறான அறிகுறிகளை காட்டியது. அதுபோலத்தான் ஒமைக்ரானும் இப்போது பொதுவான அறிகுறிகளையே காட்டுகிறது. இருப்பினும் UK's ZOE Covid Symptom study app நடத்திய ஒமைக்ரான் குறித்த ஆய்வில் ’பசியின்மை’ என்பது பலருக்கும் இருந்திருக்கிறது. இது இதுவரை இல்லாத புதிய அறிகுறியாகவும் இருந்துள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டவர்களை ஓமைக்ரான் வகை கொரோனா பாதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? அப்படி டெல்டா வேரியண்ட் ஆக்கிரமித்திருந்த அக்டோபர் மாத தரவுகளை எடுத்து ஒப்பிட்டுப் பார்த்ததில் 50 சதவீத மக்கள் மட்டுமே காய்ச்சல், இருமல் மற்றும் வாசனை அல்லது சுவை இழப்பு அறிகுறிகளை அனுபவித்ததாக கண்டறிந்துள்ளது. அதில் ஒரு சிலர் மட்டுமே பசியின்மை அறிகுறியை உணர்ந்துள்ளனர். இது இதுவரை இல்லாத அறிகுறியாக இருப்பதையும் அறிந்தது. பின் அந்த ஆப் கொரோனா மற்றும் கொரோனா வேரியண்டுகளின் அறிகுறிகள் குறித்த முழு தரவுகளின் தொகுப்பை உருவாக்கி வைத்துள்ளது. உடனே நீங்கள் செய்ய வேண்டியது என்ன..? RT-PCR செய்துகொள்வதன் மூலம் ஒருவர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளாரா இல்லையா என்பதைக் கண்டறியலாம். நீங்கள் பாசிடிவான அறிகுறிகளை உணர்ந்தால், மற்றவர்களிடமிருந்து உங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் அறிகுறிகளை தொடர்ந்து கண்காணியுங்கள். உங்கள் உடல்நிலை குறித்து நீங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள. மேலும் அவர்களையும் பரிசோதித்துக்கொள்ள அறிவுறுத்துங்கள். தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளவும் சொல்லுங்கள். தொற்றிலிருந்து உங்களை நீங்கள் தற்காத்துக்கொள்ள செய்யவேண்டியவை : அறிகுறிகள் தோன்றிய பிறகு அல்லது நீங்கள் பாதிக்கப்பட்ட எவருடனும் நெருங்கிய தொடர்பில் இருந்தால், உங்களை நீங்களே பரிசோதித்துக்கொள்வது முதல் படியாக இருக்க வேண்டும். உங்கள் மாஸ்கை தவறாமல் அணியுங்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், கூட்டங்கள் மற்றும் விருந்துகளில் மக்களை சந்திப்பதை தவிர்க்கவும் மற்றும் தேவையற்ற பயண திட்டங்களை இப்போதைக்கு ரத்து செய்யவும்.
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.