கணவர் பலி - சண்டையின் போது பொல்லால் தாக்கியாதாக மனைவி கைது...!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

 கணவர் பலி - சண்டையின் போது பொல்லால் தாக்கியாதாக மனைவி கைது...!

நுவரெலியா - பீட்று தோட்டத்துக்குரிய சின்னகாடு பிரிவில் தனி வீடு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை நுவரெலியா பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மூன்று பிள்ளைகளின் தந்தையான சண்முகம் தர்மராஜ் வயது (44) என்ற நபரே சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார் என நுவரெலியா குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். பொல்லால் தாக்கப்பட்டு காயங்களுடன் வீட்டில் உயிரிழந்து கிடந்த நிலையில் இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த நபருக்கும் அவரின் மனைவிக்கும் சண்டை ஏற்பட்டுள்ளதாகவும், மனைவிக்கும் வேறு ஒரு நபருக்கும் இடையில் உள்ள தகாத உறவு அம்பலமாகியுள்ளது. இந்த நிலையில் கணவரை மனைவி தாங்கி கொலை செய்திருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் பொலிஸார் தெரிவித்தனர். சடலம் நீதவானின் விசாரணைக்காக சம்பவம் இடம்பெற்றுள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. விசாரணைகளின் பின் சடலம் சட்ட வைத்தியர் ஊடான பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன் #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.