போதைப்பொருள் வியாபாரி பிறந்துரைச்சேனையில் கைது

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 போதைப்பொருள் வியாபாரி பிறந்துரைச்சேனையில் கைது

கொழும்பிலிருந்து போதைப்பொருளை கடத்தி வந்து கல்குடாப் பிரதேசத்தில் விற்பனையில் செய்தி வந்த ஓட்டமாவடியைச் சேர்ந்த 40 வயதுடைய வியாபாரியொருவர் பிறந்துரைச்சேனை 2ம் குறுக்கு வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய களுவாஞ்சிகுடி விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டார் இவரிடமிருந்து 30 கிராம் ஐஸ் போதைப் பொருளும் போதைப்பொருள் விற்பனைக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டதுடன், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 540,000 ரூபா என கைது செய்யப்பட்ட போதை வியாபாரியே தெரிவித்துள்ளார். குறித்த போதைப்பொருள் வியாபாரியைக் கைது செய்வதற்காக மிக நீண்ட நாட்களாக இவரைப் பின்தொடர்ந்து வந்ததுடன், திட்டமிடல்களும் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையிலேயே வசமாக மாட்டிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட நபர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன் #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.