வீதி அபிவிருத்தி பணிகளில் வீதி சமிக்ஞை இன்மையால் விபத்து.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
வீதி அபிவிருத்தி பணிகளில் வீதி சமிக்ஞை இன்மையால் விபத்து.
ஒருவர் படு காயம்! வவுனியாவில் இடம்பெற்று வரும் வீதி அபிவிருத்தி பணிகளில் வீதி சமிக்ஞைகளை காட்சிப்படுத்தாமையினால் வீதியில் வெட்டப்பட்ட குழியில் விழுந்து இளைஞரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
ஒருவர் படு காயம்! வவுனியாவில் இடம்பெற்று வரும் வீதி அபிவிருத்தி பணிகளில் வீதி சமிக்ஞைகளை காட்சிப்படுத்தாமையினால் வீதியில் வெட்டப்பட்ட குழியில் விழுந்து இளைஞரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
வவுனியா பெரியதம்பனை பண்டிவிரிச்சான் வீதி புனரமைப்பு பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் குறித்த வீதியில் பாலங்கள் அமைப்பதற்காக வீதியில் கிடங்குகள் வெட்டப்பட்டுள்ள நிலையில் அவை தொடர்பில் பயணிகளுக்கு தெளிவூட்டும் சமிக்ஞைகள் காட்சிப்படுத்தப்படாததுடன் இரவு வேளைகளில் அவ் இடங்களில் ஒளிரக்கூடிய சமிக்ஞைகளும் காணப்படுவதில்லை.
இதன் காரணமாக அவ் வீதியால் பயணிப்போர் பல சிரமங்கiளுக்குமுகம் கொடுத்து வரும் நிலையில் நேற்றைய தினம் இரவு அக் கிடங்கில் விழுந்து இளைஞர் படுகாயமடைந்துள்ளார். இதேவேளை வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபடும் பல இடங்களிலும் இவ்வாறு சமிக்ஞைகள் காட்சிப்படத்தப்படாது உள்ளமை தொடர்பிலும் மக்களால் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினருக்கு தெரிவித்தும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தனர். இந்நிலையில் வவுனியா மன்னார் வீதியின் புனரமைப்பு பணிகள் மிகவும் மந்த கதியில் இடம்பெறுவதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். பல வருடங்களாக மேற்கொள்ளப்படும் இப் புனரமைப்பு பணியினை வேகப்படுத்தாது நீண்ட காலமாக எவ்வத வேலைகளுமு; செய்யப்படாமலும் கைவிடப்பட்டு காணப்படுகின்றது. இதேவேளை பால வேலைகள் பல மாதங்களாக மேற்கொள்ளப்படாமையினால் ஒரு வழி பாதையை பயன்படுத்தும் நிலையும் காணப்படுகின்றது. எனவே இது தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன் #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.