தொலைக்காட்சி திரையில் சுவை உணர ஜப்பான் புது முயற்சி

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 தொலைக்காட்சி திரையில் சுவை உணர ஜப்பான் புது முயற்சி

தொலைக்காட்சிப் பெட்டியின் திரையில் தோன்றும் உணவுப் பொருட்களை, நக்கிச் சுவைக்கும் விதத்தில் ஒரு புதிய திரையை ஜப்பானைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். டேஸ்ட்-தி-டிவி (Taste-the-TV) என்றழைக்கப்படும் இந்த தொலைக்காட்சியின் திரை மீது ஹைஜீன் ஃபிளிம் என்றழைக்கப்படும் ஒரு வித பிளாஸ்டிக் படச்சுருள் விரிக்கப்பட்டு, அதன் மீது 10 ரக சுவை நிறைந்த ஸ்பிரே தெளிக்கப்படும். 

இந்த ரக தொலைக்காட்சிகளைக் கொண்டு, சமையல் கலைஞர்களை அல்லது வொயின் நிபுணர்களை தொலை தூரத்தில் இருந்து கொண்டு பயிற்றுவிக்கலாம் என ஜப்பான் நாட்டின் மேஜி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஹோமி மியஷிடா தெரிவித்துள்ளார் இந்த தொலைக்காட்சிகளை வணிக ரீதியில் தயாரிக்கத் தொடங்கினால் ஒரு டிவியை தயாரிக்க 875 அமெரிக்க டாலர் ஆகும் என்றும் அவர் மதிப்பிட்டுள்ளார். 

“வீட்டில் இருந்தபடியே உலகின் மறுமுனையில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிடுவது போன்ற அனுபவத்தைச் சாத்தியப்படுத்துவது தான் இந்த தொழில்நுட்பத்தின் இலக்கு” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.