இலங்கைக்கு ஏற்படவுள்ள பாரிய சிக்கல்!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 இலங்கைக்கு ஏற்படவுள்ள பாரிய சிக்கல்!

எதிர்வரும் ஆண்டு உணவு பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரிக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயத் துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 

இதன்படி ,நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய இந்த நிலை குறித்து கண்டறியப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு உடனடியாக தீர்வு வழங்கப்படாவிடில், அடுத்த ஆண்டு மார்ச் மாதமளவில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 200 ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 மேலும் ,இந்த விடயம் தொடர்பாக கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விவசாய திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், விவசாயத்துறை நிபுணர் கே.பீ.குணரத்ன, உரத்தட்டுபாடு காரணமாக பெரும்போக விளைச்சல் உரிய முறையில் இல்லை என தெரிவித்துள்ளார். 

நெல் பயிரிடப்பட்டுள்ள போதிலும் உரத்தட்டுப்பாடு காரணமாக பயிர்களில் வளர்ச்சி போதிய அளவில் காணப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.