இலங்கை பெற்றகடனை திருப்பி செலுத்த கால அவகாசம் வழங்கியது பங்களாதேஷ்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

இலங்கை பெற்றகடனை திருப்பி செலுத்த கால அவகாசம் வழங்கியது பங்களாதேஷ்.

பங்களாதேஷ் வங்கியிடம் இருந்து இலங்கை பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. 

கடனை திருப்பிச் செலுத்தும் மூன்று மாத கால அவகாசம் முடிவடைந்த நிலையில் இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக கால அவகாசம் நீடிக்கப்பட்டது என பங்களாதேஷ் வங்கி அறிவித்துள்ளது.

 பங்களாதேஷ் ஊடனான நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் மூன்று தவணைகளின் அடிப்படையில் 200 மில்லியன் டொலர் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டது. 

கடந்த ஓகஸ்ட் 19 இல் 50 மில்லியன் டொலர்களையும் 100 மில்லியன் டொலர் இரண்டாவது தவணை ஓகஸ்ட் 30 அன்றும் 50 மில்லியன் டொலர் இறுதி தவணை செப்டம்பர் 21 அன்றும் வழங்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, பங்களாதேஷூக்கு கடன் தொகைக்கு வட்டியாக 2 சதவீதத்தை இலங்கை அரசாங்கம் செலுத்தவேண்டும். 

ஆறு மாதங்களுக்குப் பின்னரும் தவணை நிதி செலுத்தப்படாமல் இருந்தால், 2.5 சதவீதம் மற்றும் கடன் தொகை திருப்பிச்செலுத்த வேண்டும். எனினும் இலங்கை குறைந்தபட்சம் ஒன்பது மாதங்களுக்கு இந்த நிதியைப் பயன்படுத்தும் என தாம் எதிர்பார்ப்பதாக பங்களாதேஷ் மத்திய வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 கொரோனா தொற்று காரணமாக இலங்கையின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதனால் கடந்த ஆண்டு நாட்டின் பொருளாதாரம் 3.4 சதவீதமாக குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 ✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.