பிரேசிலில் வெள்ளப்பெருக்கு - பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

பிரேசிலில் வெள்ளப்பெருக்கு - பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு.


பாஹியா மாநிலத்தில் இவ்வளவு மோசமான வெள்ள பாதிப்பு இதுவரை ஏற்பட்டதில்லை என அம்மாநில கவர்னர் ரூயி கோஸ்டா தெரிவித்துள்ளார்.

 பிரேசில் நாட்டின் வடகிழக்கில் உள்ள பாஹியா மாநிலத்தில், கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள 2 அணைகள் முழுவதுமாக நிரம்பி, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

மேலும் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது. சுமார் 1 கோடியே 50 லட்சம் பேர் வசிக்கும் பாஹியா மாநிலத்தில், வெள்ள பாதிப்பு காரணமாக 72 நகராட்சிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

 இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 20 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்கும் பணிகளில் அந்நாட்டின் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து, மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதால் பல இடங்களில் மீட்புப் பணிகள் முடங்கியுள்ளது. 

பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து இதுவரை 16 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.