இலங்கை மக்களிடம் மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
நாடுமுழுவதும் போலி நாணயத்தாள்கள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இலங்கை மக்களிடம் மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!
நாடுமுழுவதும் போலி நாணயத்தாள்கள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
சந்தேகத்துக்கு இடமான நாணயத்தாள் ஒன்று காணப்பட்டால் பாதுகாப்புச் சின்னம் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் அதனைத் தம்வசம் வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நாணயத்தாளை கொண்டுவந்தவர், அவரது தோற்றம், வாகனத்தில் வந்தால் வாகனத்தின் விவரம், பணத்தாளின் மதிப்பு மற்றும் வரிசை எண் ஆகியவற்றைப் பதிவு செய்து அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது குற்றப் புலனாய்வு துறையின் போலி நாணயப் பிரிவினரின் 0112422176 மற்றும் 0112326670 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து தெரிவிக்க வேண்டும்.
போலி நாணயத்தாள்களை வைத்திருந்தமை, பயன்படுத்துதல் அல்லது அச்சடித்தல் போன்ற குற்றங்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக போலி நாணயத்தாள்களை அச்சடித்து விநியோகிப்பது தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.