அமைச்சர் பந்துல உறுதியளித்தபடி சதொசவில் போதியளவு கையிருப்பு இல்லை : நுகர்வோர்
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
அமைச்சர் பந்துல உறுதியளித்தபடி சதொசவில் போதியளவு கையிருப்பு இல்லை : நுகர்வோர்
நாடளாவிய ரீதியிலுள்ள சதொச விற்பனை நிலை யங்களின் ஊடாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியை நுகர்வோர் 1998 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சரான பந்துல குணவர்த்தன அண்மையில் அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார்.
நாடளாவிய ரீதியிலுள்ள சதொச விற்பனை நிலை யங்களின் ஊடாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியை நுகர்வோர் 1998 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சரான பந்துல குணவர்த்தன அண்மையில் அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார்.
இதேவேளை இந்நிவாரணப் பொதியை நுகர்வோர் 1998 எனும் தொலைபேசி எண்களுக்கு அழைப்பதன் மூலம் வீடுகளுக்கே பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் அறிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், நாடளாவிய ரீதியிலுள்ள சதொச விற்பனை நிலையங்களுக்குச் சென்றுள்ள பலர் வெறுங்கையுடனோ அல்லது மிகக்குறைந்த அத்தியாவசியப் பொருட்களுடனோ தமது வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.
பொரளையிலுள்ள வாடிக்கையாளர் ஒருவர் கூறுகை யில், ஒரு கிலோகிராம் அரிசியைத் தவிர நிவாரணப் பொதியில் எதுவும் இல்லை என்றும், தமக்கு 3 கிலோ கிராம் சீனி தேவைப்பட்ட போதிலும் 2 கிலோகிராம் மாத்திரமே வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். பொருட்களை காட்சிப்படுத்தும் அநேக இறாக்கைகள் வெறுமையாக இருப்பதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.
அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் வெறுங்கையுடன் வீடு திரும்பியுள்ள மக்கள், சதொசவுக்குச் செல்வதில் எந்தப் பயனும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். மா மற்றும் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு இல்லை என செய்திகள் வெளியாகியுள்ள போதிலும், அவை அப்பட்டமான பொய்கள் என நுகர்வோர் சுட்டிக்காட்டியுள்ளனர். ‘சதொச’ வெறும் பெயருக்காகவே செயற்படுவதாகவும் எனினும் கறுப்புச் சந்தையில் பொருட்கள் இருப்ப தாகவும் ஏமாற்றமடைந்த மற்றுமொரு நுகர்வோர் தெரிவித்துள்ளார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.