29 வயதில் ஓய்வு.. திடீரென அறிவித்த டி காக்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
29 வயதில் ஓய்வு.. திடீரென அறிவித்த டி காக்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
தென் ஆப்பிரிக்காவின் அதிரடி விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மென் குவிண்டன் டி காக் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் அதிரடி விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மென் குவிண்டன் டி காக் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார்.
செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தோற்ற ஐந்தாம் நாள் போட்டி முடிந்த பிறகு சிறிது நேரத்தில் தென் ஆப்பிரிக்காவின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் குவிண்டன் டி-காக் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்.
இது அவரது ரசிகர்களுக்கு உச்சக்கட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திடீர் ஒய்வு: இந்திய அணி நேற்று நடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சாதித்தது. இந்த நிலையில் குவிண்டன் டி காக் திடிரென யாரும் எதிர்பார்க்காத விதமாக ஓய்வு அந்த அணியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா கேப்டனாக நான்கு டெஸ்ட் போட்டிகளில் ஆடினார் டி காக். இலங்கையுடன் 2-0 என்று வென்றார், ஆனால், பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தானில் 0-2 என்று தோற்றார். டி காக் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2014-ல் டெஸ்ட்டில் அறிமுகமானார்.
54 டெஸ்ட் போட்டிகளில் 3,300 ரன்களை எடுத்தார். 29 வயதில் ஒய்வு: 29 வயதே ஆனா அவர் தன்னுடைய வளரும் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட வேண்டி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விலக்கு கேட்டிருந்தார் டி காக், ஆனால் திடீரென இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டே வேண்டாம் என்று ஓய்வை அறிவித்துள்ளார்.
செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் நன்றாகவே விளையாடினார். ஆனால், 2 இன்னிங்ஸ்களிலும் பந்தை மட்டையில் வாங்கி ஸ்டம்புக்குள் விட்டுக் கொண்டு தேவையில்லாமல் அவுட் ஆனார். ஓய்வுக்கு என்ன காரணம்? இந்த நிலையில், “நான் இந்த டெஸ்ட் ஓய்வு முடிவுக்கு யோசிக்காமல் வந்துவிடவில்லை.
என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து தான் இந்த முடிவுக்கு வந்தேன். நான் என் மனைவி சாஷாவும் எங்கள் முதல் குழந்தையை வரவேற்கக் காத்துள்ளோம். எங்கள் குடும்பத்தை கவனிப்பது என் கடமை. அதற்கு நேரம் என்பது மிகவும் முக்கியம் ஆகும்.
குடும்பம் முக்கியம்: எனக்கு என் குடும்பம்தான் முக்கியம், இப்போது புதிதாக வரப்போகும் உறவுடன் எங்களுக்கு உற்சாகமான வாழ்க்கை காத்துள்ளது. எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும், என் நாட்டுக்காக ஆடுவதும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. என் கிரிக்கெட் வாழ்வில் வெற்றிகளையு, தோல்விகளையும், மகிழ்ச்சியையும், ஏற்றத்தாழ்வுகளையும் பார்த்து விட்டேன். இப்போது நான் கண்டுப்பிடித்துக் கொண்ட எனக்கான வாழ்க்கையை வாழ போகிறேன்.
என்னுடைய கிரிக்கெட் வாழ்வில் என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றியை கூறிக் கொள்கிறேன். இது என் கிரிக்கெட் வாழ்வின் முடிவு கிடையாது, ஒருநாள் டி-20 கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து ஆடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.