ஆழ்ந்த இரவு உறக்கத்துக்காக போராடுகிறீர்களா? நிபுணர் பரிந்துரைக்கும் 10 பயனுள்ள குறிப்புகள் இதோ!
ஆழ்ந்த இரவு உறக்கத்துக்காக போராடுகிறீர்களா? நிபுணர் பரிந்துரைக்கும் 10 பயனுள்ள குறிப்புகள் இதோ!
உறக்கம் என்பது மன மற்றும் உடல் ஆரோக்கியம் மற்றும் மனித செயல்திறனின் அனைத்து அம்சங்களுக்கும் அடித்தளமாகும்.
நாம் அனைவரும், தோல் பராமரிப்பு வழக்கம், ஆரோக்கியமான உணவுகளை உண்ணுதல், உடற்பயிற்சி செய்தல் போன்றவற்றில் பிஸியாக இருக்கும்போது, பலரும் கவனிக்காத ஆரோக்கியத்தின் ஒரு அம்சம் உள்ளது – அதுதான் தூக்கம்.
எரிச்சல், விரக்தி, அதிகரித்த பசி, சோர்வு மற்றும் இதய நோய்கள், டைப் 2 நீரிழிவு, மற்றும் உயர் இரத்த அழுத்தம், மற்றவற்றுடன் தூக்கமின்மை’ தன்னை வெளிப்படுத்துகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
தூங்குவதில் சிக்கல் இருப்பதால், குறைந்தது 7-8 மணிநேரம் நன்றாக தூங்குவதற்கு பலர் போராடுகிறார்கள். அதிகரித்த திரை வெளிப்பாடு, உறங்கும் நேரத்தில் காஃபின் அதிகமாக உட்கொள்வது, கவலை, தூக்கமின்மை, அமைதியின்மை மற்றும் பல காரணங்களால் இது ஏற்படலாம்.
மேலும் மூன்றாவது அலைக்கு மத்தியில், மீண்டும் வொர்க் ஃப்ரம் ஹோம்-க்கு திரும்புவது விஷயங்களை இன்னும் மோசமாக்கியது.
ஸ்டாண்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் நிபுணர் ஆண்ட்ரூ ஹூபர்மேன் பகிர்ந்துள்ள குறிப்புகள், நீங்கள் நல்ல தூக்கத்தைப் பெற உதவும்.
நல்ல ஆழ்ந்த தூக்கத்திற்கான சில அறிவியல் ஆதரவு குறிப்புகள் மற்றும் தந்திரங்களை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்து கொண்டார். உறக்கம் என்பது மன மற்றும் உடல் ஆரோக்கியம் மற்றும் மனித செயல்திறனின் அனைத்து அம்சங்களுக்கும் அடித்தளமாகும்.
சிறந்த இரவு தூக்கத்தை பெற நீங்கள் செய்யக்கூடிய 10 விஷயங்கள் இங்கே!
👉விழித்த 30-60 நிமிடங்களுக்குள் வெளியே சென்று சூரிய ஒளியைப் பார்க்கவும். சூரிய அஸ்தமனத்திற்கு முன், மீண்டும் அதை செய்யவும்.
👉ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் எழுவதை வழக்கமாக்குங்கள், தூக்கம் வரத் தொடங்கியதும் தாமதிக்காமல் உடனே தூங்கச் செல்லுங்கள்.
👉படுக்கைக்கு செல்வதற்கு 8-10 மணி நேரத்திற்குள் காஃபின் பானங்களை தவிர்க்கவும்.
👉உங்களுக்கு தூக்கக் கலக்கம், தூக்கமின்மை அல்லது தூக்கத்தைப் பற்றிய கவலை இருந்தால், சில வகையான சுய-ஹிப்னாஸிஸை முயற்சிக்கவும்.
👉குறிப்பாக இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை, பிரகாசமான விளக்குகளைப் பார்ப்பதைத் தவிர்க்கவும்.
👉பகல்நேரத் தூக்கத்தை 90 நிமிடங்களுக்கும் குறைவாகக் கட்டுப்படுத்துங்கள் அல்லது தூங்கவே வேண்டாம்.
👉ஒருவேளை, நள்ளிரவில் எழுந்து மீண்டும் உறங்க முடியாவிட்டால், நீங்கள் எழுந்ததும் NSDR (non-sleep deep rest) நெறிமுறையைச் செய்ய வேண்டும்.
👉 நீங்கள் உறங்கும் அறையை குளிர்ச்சியாகவும், இருட்டாகவும் வைக்கவும்.
இத்துடன் சில சப்ளிமெண்ட்ஸையும் மருத்துவர் அறிவுறுத்துகிறார் — (படுக்கைக்கு 30-60 நிமிடங்களுக்கு முன்): 145mg Magneisum Threonate அல்லது 200mg Magnesium Bisglycinate, 50mg Apigenin, 100-400mg Theanine, ஆனால் அது உங்கள் மருத்துவரின்பரிந்துரையின் பேரில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.