வரலாற்றில் இன்று ஜனவரி 27.2022
வரலாற்றில் இன்று ஜனவரி 27.2022
சனவரி 27 கிரிகோரியன் ஆண்டின் 27 ஆம் நாளாகும்.
ஆண்டு முடிவிற்கு மேலும் 338 (நெட்டாண்டுகளில் 339) நாட்கள் உள்ளன.
இன்றைய தின நிகழ்வுகள்
98 – திராயான் உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். இவரின் ஆட்சிக் காலத்தில் உரோமைப் பேரரசு தனது உச்ச நிலையை எட்டியிருந்தது.
1302 – கவிஞர் டான்டே அலிகியேரி புளோரன்சில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.
1343 – திருத்தந்தை ஆறாம் கிளமெண்டு திருத்தந்தையின் அதிகாரத்தை நியாயப்படுத்தியும், பாவத்தண்டனைக் குறைப்பின் பயன்களை விளக்கியும் ஆணை ஓலையை வெளியிட்டார்.
1606 – வெடிமருந்து சதித்திட்டம்: கை பாக்சு மீது விசாரணைகள் ஆரம்பமாயின, சனவரி 31 இல் இவர் தூக்கிலிடப்பட்டார்.
1695 – உதுமானியப் பேரரசர் இரண்டாம் அகமது இறந்ததை அடுத்து இரண்டாம் முஸ்தபா பேரரசரானார்.
1785 – அமெரிக்காவின் முதலாவது பொதுப் பல்கலைக்கழகம் ஜோர்ஜியா பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
1820 – மிகைல் லசாரொவ் தலைமையிலான உருசியக் குழு அந்தாட்டிக்கா கண்டத்தைக் கண்டுபிடித்தது.
1825 – ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் இந்தியப் பிராந்தியத்தை (இன்றைய ஓக்லகோமா) அங்கீகரித்தது. இதன் மூலம் கிழக்கிந்தியர்களை கட்டாயமாக “கண்ணீர்த் தடங்களில்” இடம்பெயர வைக்க முடிந்தது.
1858 – இந்திய சிப்பாய்க் கிளர்ச்சி நிதிக்காக இலங்கையில் £2,771 நிதி சேகரிக்கப்பட்டது.
1880 – தாமஸ் எடிசன் வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் பெற்றார்.
1888 – தேசிய புவியியல் கழகம் வாசிங்டன், டி. சி.யில் அமைக்கப்பட்டது.
1915 – ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் ஹெயிட்டியை ஆக்கிரமித்தனர்.
1916 – முதலாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சிய இராணுவத்திற்குக் கட்டாயமாக ஆள்சேர்க்கும் திட்டத்திற்கான சட்டமூலத்தை பிரித்தானிய அரசு நிறைவேற்றியது.
1918 – பின்லாந்தில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
1924 – விளாடிமிர் லெனினின் உடல் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் மாலை 4:00 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.
1926 – ஜோன் லோகி பயார்ட் முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்திக் காட்டினார்.
1938 – நியூ யோர்க்கில் நயாகரா நீர்வீழ்ச்சியில் நயாகரா பாலம் உடைந்து வீழ்ந்தது.
1944 – இரண்டாம் உலகப் போர்: அச்சு நாடுகளின் 900-நாள் லெனின்கிராட் முற்றுகை முடிவுக்கு வந்தது.
1945 – இரண்டாம் உலகப் போர்: லட்சக்கணக்கான யூதர்கள் குரூரமாகக் கொல்லப்பட்ட போலந்தின் அவுஷ்விட்ஸ் சித்திரவதை முகாமில் எஞ்சியிருந்த கைதிகள் 7,600 பேர் சோவியத் செம்படையினாரால் விடுவிக்கப்பட்டனர்.
1951 – அணுகுண்டு சோதனை நெவாடாவில் ஆரம்பமானது.
1962 – 1962 இலங்கை ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி: இலங்கையில் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான அரசுக்கு எதிராக இலங்கைப் படைத்துறையினர் சிலரால் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டது.
1967 – பனிப்போர்: விண்வெளியில் அறுவாயுதத் தடை, நிலா மற்றும் ஏனைய வானியல்சார் பொருட்களை அமைதி வழிக்கும் பயன்படுத்தல் ஆகியவற்றுக்கான ஒப்பந்தம் சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகிவற்றுக்கிடையே வாசிங்டன், டி. சி.யில் கையெழுத்திடப்பட்டது.
1967 – எட்வேர்ட் வைட் உட்பட அப்பல்லோ 1 விண்வெளி வீரர்கள் மூவர் கென்னடி விண்வெளி மையத்தில் தமது விண்கலத்தைப் பரிசோதிக்கும் போது இடம்பெற்ற தீ விபத்தில் உயிரிழந்தனர்.
1973 – வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்பாடு பாரிசில் எட்டப்பட்டது.
1996 – செருமனி முதல்தடவையாக பன்னாட்டு பெரும் இன அழிப்பு நினைவு நாளை நினைவு கூர்ந்தது.
1996 – நைஜரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் நாட்டின் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிபர் மஹமான் ஊஸ்மன் பதவியிலிருந்து அகற்றப்பட்டு இராணுவத் தளபதி இப்ராகிம் மயினாசரா ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.
2002 – நைஜீரியாவின் லாகோஸ் நகரில் இராணுவக் களஞ்சியமொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 1,000 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
2011 – அரேபிய வசந்தம்: 2011 யெமனிய எதிர்ப்புப் போராட்டங்கள் சனாவில் ஆரம்பமாயின.
2013 – பிரேசிலின் சாண்டா மரியா நகரில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீயினால் 242 பேர் உயிரிழந்தனர்.
இன்றைய தின பிறப்புகள்
1756 – வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்சார்ட், ஆத்திரிய செவ்விசையமைப்பாளர் (இ. 1791)
1775 – பிரீடரிக் ஷெல்லிங், செருமானிய-சுவிட்சர்லாந்து மெய்யியலாளர் (இ. 1854)
1832 – லூயிஸ் கரோல், ஆங்கிலேயக் கணிதவியலாளர், நூலாசிரியர் (இ. 1898)
1859 – செருமனியின் இரண்டாம் வில்லியம் மி. 1941)
1890 – சுவாமி சகஜானந்தா, தமிழக ஆன்மிகவாதி, அரசியல்வாதி (இ. 1959)
1909 – ஜூலியன் ஆல்பிரட் ஸ்டியர்மார்க், அமெரிக்க தாவரவியலாளர் (இ. 1988)
1934 – எடித் கிரசான், பிரான்சின் 160வது பிரதமர்
1935 – கோமல் சுவாமிநாதன், தமிழக எழுத்தாளர், திரைப்பட இயக்குனர், இதழாளர் (இ. 1995)
1941 – பியேத்ரிசு தின்சுலே, நியூசிலாந்து வானியலாளர் (இ. 1981)
1942 – தசுக்கு ஓஞ்சோ, நோபல் பரிசு பெற்ற சப்பானிய மருத்துவர்
1945 – நெல்லைக் கண்ணன், தமிழகப் பேச்சாளர், பட்டிமன்ற நடுவர்.
1946 – விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், தமிழக நாட்டுபுறவியலாளர், கிராமிய இசைக் கலைஞர், கல்வியாளர்.
1956 – மிமி ரோகேர்ஸ், அமெரிக்க நடிகை.
1956 – அமர் சிங், உத்தரப் பிரதேச அரசியல்வாதி.
1965 – ஆலன் கம்மிங், ஈசுக்கொட்டிய-அமெரிக்க நடிகை.
1974 – சமிந்த வாஸ், இலங்கைத் துடுப்பாளர்.
1976 – சிரேயசு தள்பதே, மராத்தி, இந்திய நடிகர்.
1979 – டேனியல் வெட்டோரி, நியூசிலாந்து துடுப்பாளர்.
இன்றைய தின இறப்புகள்
1311 – குலுக் கான், மங்கோலியப் பேரரசர் (பி. 1281)
1596 – பிரான்சிஸ் டிரேக், ஆங்கிலேய நாடுகாண் கடற்படைத் தலைவர் (பி. 1540)
1814 – யோகான் பிக்டே, செருமானிய மெய்யியலாளர் (பி. 1762)
1851 – ஜான் ஜேம்ஸ் அடுபன், பிரான்சிய-அமெரிக்க பறவையியல் வல்லுநர், ஓவியர் (பி. 1789)
1893 – மகா வைத்தியநாத ஐயர், கருநாடக இசைப் பாடகர் (பி. 1844)
1901 – ஜூசெப்பே வேர்டி, இத்தாலிய இசையமைப்பாளர் (பி. 1813)
1922 – நெல்லி பிளை, அமெரிக்க ஊடகவியலாளர் (பி. 1864)
1965 – விருகம்பாக்கம் அரங்கநாதன், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தீக்குளித்து உயிர்நீத்த போராளி (பி. 1913)
1967 – எட்வேர்ட் வைட், அமெரிக்க விண்வெளி வீரர் (பி. 1930)
1979 – விக்டோரியா ஒகாம்போ, ஆர்ச்செந்தீனிய இலக்கியவாதி, எழுத்தாளர் (பி. 1890)
1983 – லூயிசு டி புனெசு, பிரெஞ்சு நடிகர் (பி. 1914)
2008 – சுகார்த்தோ, இந்தோனேசியாவின் 2வது அரசுத்தலைவர் (பி. 1921)
2009 – ரா. வெங்கட்ராமன், இந்தியாவின் 8வது குடியரசுத் தலைவர் (பி. 1910)
2010 – ஜே. டி. சாலிஞ்சர், அமெரிக்க எழுத்தாளர் (பி. 1919)
2010 – ஓவர்ட் சின், அமெரிக்க எழுத்தாளர், வரலாற்றாசிரியர் (பி. 1922)
2014 – பீட் சீகர், அமெரிக்கப் பாடகர் (பி. 1919)
2014 – இரா. அ. பத்மநாபன், தமிழக ஊடகவியலாளர்
2015 – சார்லஸ். எச். டவ்ன்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1915)
2018 – இங்வர் காம்பரத், ஐ.கே.இ.ஏ நிறுவனர் (பி. 1926)
2020 – மல்லிகை சி. குமார், இலங்கை மலையக எழுத்தாளர், ஓவியர் (பி. 1944)
இன்றைய தின சிறப்பு நாள்
பன்னாட்டு பெரும் இன அழிப்பு நினைவு நாள்
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.