பிரதமர் இம்ரான் கானை சந்தித்த பந்துல.
பிரதமர் இம்ரான் கானை சந்தித்த பந்துல.
பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கை – பாகிஸ்தான் வர்த்தக உடன்படிக்கையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மற்றும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வது அவசியம் என பாகிஸ்தான் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.
பௌத்த சமூகத்தினர் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்வதை மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு உத்தேசித்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இந்த சந்திப்பின் போது தெரிவித்ததாக வர்த்தக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுடனான கொடுக்கல், வாங்கல்களை மேலும் வலுப்படுத்துவதற்காக அந்நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த தாம் உள்ளிட்ட வர்த்தக குழுவினருக்கு வழங்கிய வரவேற்பிற்கு வர்த்தக அமைச்சர், கலாநிதி பந்துல குணவர்தன நன்றி தெரிவித்துள்ளார்.
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇
https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇
https://t.me/Internationaltamilmedia
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.