பார்வைக் குறைபாடுள்ளோரின் எண்ணிக்கை நாட்டில் அதிகரிப்பு
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
பார்வைக் குறைபாடுள்ளோரின் எண்ணிக்கை நாட்டில் அதிகரிப்பு
பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது நாட்டில் பார்வைக் குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக இலங்கை கண் பராமரிப்பு ஒளியியல் சங்கம் தெரிவித்துள்ளது.
பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது நாட்டில் பார்வைக் குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக இலங்கை கண் பராமரிப்பு ஒளியியல் சங்கம் தெரிவித்துள்ளது.
2013 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் சோதனைகளை முன்னெடுத்ததாகவும், 1.1 வீதம் பேர் பார்வைக் குறைபாடுடையவர்கள் எனக் கண்டறியப்பட்டனர் என்றும் சங்கத்தின் ஸ்தாபகரும் கண் பராம ரிப்பு நிபுணருமான நரேஷ் பிரதன் தெரிவித்துள்ளார்.
நேற்று அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார். “இந்தியாவில் 0.47 வீதம் மற்றும் நேபாளத்தில் 0.3 4வீதம் பார்வையற்ற தன்மை பதிவாகியுள்ளது. இருப்பினும், இலங்கையில் இது அதிகமாக உள்ளது. கண் மருத்துவமனைகளுக்குச் செல்லும் பெரும்பாலான மக்கள் 80 வீதம் பார்வையை இழந்துள்ளனர்.
80 வீதப் பாதிப்பைத் தொடர்ந்து பார்வையை மீட்டெடுக்க எந்த வழியும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். தொற்று நோயின்போது பெரும்பாலான மக்கள் தொலைபேசிகளிலும் கணினிகளிலும் தங்கள் நேரத்தைச் செலவிட்டனர்.
பெரும்பாலான மாணவர்கள் தொடர்ந்து ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக ‘ஒன்லைன்’ மூலம் படிப்பைத் தொடர வேண்டியிருந்தது. நாட்டில் பார்வைக் குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இது ஒரு பெரும் ஆபத்து என்றும் அவர் கூறினார்.
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.