தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் முன்னெடுப்பு : சுகாதார அமைச்சர்
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் முன்னெடுப்பு : சுகாதார அமைச்சர்
பொது இடங்களில் கொவிட் -19 தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
பொது இடங்களில் கொவிட் -19 தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
QR குறியீடு மற்றும் விண்ணப்பத்தை வழங்குவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித் தார்.
தடுப்பூசிகளை கட்டாயமாக்க முடியாத நிலையில், பொது இடங்களுக்குப் பிரவேசிக்கும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க முடியும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
பொதுச் சுகாதார பரிசோதகர்களுடனான கலந்துரை யாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை, தற்போது மாகாண சபைகளின் கட்டுப்பாட்டிலுள்ள பல வைத்தியசாலைகளை உரிய அமைச்சின் கீழ் கையகப்படுத்துவது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றது.
நாளாந்தம் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளி களின் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஆகியவற்றை கருத்திற் கொண்டு மக்களின் சுகாதார சேவைகளை மேம்படுத்தும் வகையில் நாட்டிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளை அரசாங்கம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.