முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு - சகல அரபுக்
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு - சகல அரபுக் கல்லூரிகளுக்குமானது.
𝑰𝑻𝑴 🔹அரபுக் கல்லூரிகளினால் வழங்கப்படும் ஆவணங்கள் இலங்கையின் அரசகரும மொழிகளான சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் அமையப் பெற்றிருக்க வேண்டுமென முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அரபுக்கல்லூரிகளின் நிர்வாகங்களை அறிவுறுத்தியுள்ளது.
𝑰𝑻𝑴 🔹மேலும் Diploma, Higher Diploma, Higher Studies, Higher Education, Degree, Licentiate போன்ற வாசகங்கள் இலங்கை பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தின் அடிப்படையில் மாத்திரமே பயன்படுத்தப்படுவதால், குறிப்பிட்ட வாசகங்கள் மத்ரஸாவினால் வழங்கப்படும் ஆவணங்களில் உள்ளடங்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளது.
𝑰𝑻𝑴 🔹இது தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இப்ராஹிம் அன்ஸார் அரபுக்கல்லூரிகளுக்கு MRCA/R/08/01/01 எனும் இலக்க சுற்று நிருபம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார். சுற்றுநிருபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
𝑰𝑻𝑴 🔹திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அரபுக்கல்லூரிகளினால் வழங்கப்படும் ஆவணங்கள் உரிய விதிமுறைகளுக்கு உட்படாவிட்டால் திணைக்களத்தினால் அவ் ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள், கல்விச் சான்றிதழ்கள் உறுதிப்படுத்தப்பட மாட்டாது.
𝑰𝑻𝑴 🔹கல்லூரியினால் வழங்கப்படும் சான்றிதழ்களில் ஒப்பமிடுபவர்கள் தொடர்பான பெயர், பதவி மற்றும் மாதிரி ஒப்பங்கள் திணைக்களத்திற்கு வழங்கப்பட வேண்டும். மாற்றங்கள் ஏற்படும் போது அவ்வவ்போது அறிவிக்க வேண்டும்.
𝑰𝑻𝑴 🔹கல்லூரியினால் தயாரிக்கப்படும் சான்றிதழ்களின் பிரதி ஒன்றினை மாதிரி சான்றிதழ் எனக் குறிப்பிட்டு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். சான்றிதழ்களின் மாதிரிகள் மாற்றப்படுமாயின் திணைக்களத்துக்கு அறிவிக்க வேண்டும்.
𝑰𝑻𝑴 🔹கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் 2021ஆம் ஆண்டு வரை பட்டம் பெற்றவர்களின் முழுப்பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம் போன்ற தகவல்கள் ஆண்டின் அடிப்படையில் கல்லூரியினால் சான்று படுத்தி திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
𝑰𝑻𝑴 🔹கல்லூரியினால் வழங்கப்படும் பட்டத்தின் தன்மை சான்றிதழில் (மௌலவி சான்றிதழ்/ ஹிப்லு சான்றிதழ்) என்று தெளிவாக குறிப்பிடப்படல் வேண்டும்.கல்லூரியில் கற்பிக்கப்படும் பாடத்திட்டத்தின் பிரதியொன்று திணைக்களத்திற்கு வழங்கப்படல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
𝑰𝑻𝑴 🔹இந்த விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்படுவதாக பணிப்பாளர் இப்ராஹிம் அன்சார் தெரிவித்தார்
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.