திருமலை எண்ணெய்க்குத ஒப்பந்தத்துக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம்!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

திருமலை எண்ணெய்க்குத ஒப்பந்தத்துக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை எண்ணெய்க் குத வளாகத்தை அபிவிருத்தி செய்வதற்கான உடன்படிக்கைக்கு எதிராக தொழிற்சங்கங்கள் பொது மக்களின் பங்குபற்றுதலுடன் பணித்தளங்களில் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

 திருகோணமலை எண்ணெய்க்குத வளாகத்துக்கு எதிரே இன்று பிற்பகல் 2.30 மணிக்கு போராட்டம் முன்னெடுக் கப்படவுள்ளதாக தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

 இதற்கான ஒப்பந்தம் ஜனவரி 6ஆம் திகதி கைச்சாத் திடப்பட்டது. இந்தியாவின் கட்டுப்பாட்டிலிருந்த 99 குதங்களில் 85 குதங்கள் இப்போது இலங்கையிடம் ஒப்படைக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

 எனினும் இந்த உடன்படிக்கை நாட்டின் பல துறை களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என அவர் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் 877 ஏக்கர் நிலத்தை அரசாங்கம் நெறிமுறையற்றதாகவும், சட்டவிரோத மாகவும் விற்பனை செய்துள்ளதாகவும், இது முந்தைய யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தத்தை விட பாரிய துரோகம் எனவும் அவர் தெரிவித்தார். 

இந்த ஒப்பந்தம் தொடர்பான விபரங்கள் குறித்து அமைச்சர்கள் அமைச்சரவைக்கோ அல்லது தொழிற்சங்கங்களுக்கோ தெரிவிக்கவில்லை. 

இந்த உடன்படிக்கையானது தேசிய பாதுகாப்புக்கும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களின் பணிப் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.