ஒரு லீற்றர் டீசலால் 30 ரூபா நட்டம் ; எரிபொருள் விலை உயர்வை தவிர்க்க முடியாது : உதய கம்மன் பில
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
ஒரு லீற்றர் டீசலால் 30 ரூபா நட்டம் ; எரிபொருள் விலை உயர்வை தவிர்க்க முடியாது : உதய கம்மன் பில
நாட்டில் விற்பனை செய்யப்படும் டீசல் லீற்றர் ஒன்றினால் 30 ரூபா நட்டம் ஏற்படுவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நாட்டில் விற்பனை செய்யப்படும் டீசல் லீற்றர் ஒன்றினால் 30 ரூபா நட்டம் ஏற்படுவதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 89 டொலராக உயர்ந்துள்ளது. இது ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவு என்று அமைச்சர் கூறினார்.
இலங்கையின் மாதாந்த ஏற்றுமதி வருமானத்தில் மூன்றில் இரண்டு பங்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை மாதம் 500 மில்லியன் டொலரை செலவிடுகிறது.
இதன்படி, நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு ஒட்டுமொத்த மக்களும் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றார். எவ்வாறாயினும், எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பெப்ரவரியில் குளிர்காலம் தொடங்கும் நிலையில், குளிர் நாடுகளில் எரிபொருள் தேவை அதிகரித்து வருவதால் மசகு எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டொலரை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
டொலர் நெருக்கடி காரணமாக இந்த நிலைமை இலங்கையிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் மற்றும் எரிபொருள் விலையை அதிகரிக்காவிட்டால் எண்ணெய் கூட்டுத்தாபனம் வரம்பற்ற நட்டத்தை சந்திக்கும் அபாயம் உள்ளது என்றார்.
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc
https://ift.tt/3vnDiVc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.