இன்றைய தினம் ஒரு மணிநேரமும்,நாளை முதல் சுமார் 2 மணிநேரமும் மின் துண்டிப்பை மேற்கொள்ள நடவடிக்கை

இன்றைய தினம் ஒரு மணிநேரமும்,நாளை முதல் சுமார் 2 மணிநேரமும் மின் துண்டிப்பை மேற்கொள்ள நடவடிக்கை


மின்சார உற்பத்திக்கான எரிபொருள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் நாட்களில் மின்சார உற்பத்திக்காக தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருள் தொகை போதுமானதா? இல்லையா என்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை இன்று முதல் மீண்டும் மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கான யோசனை ஒன்றை முன்வைத்துள்ளதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இதன்படி இன்றைய தினம் ஒரு மணிநேரமும், நாளை முதல் சுமார் 2 மணிநேரமும் மின் துண்டிப்பை மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என அந்த சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரட்ன தெரிவித்துள்ளார். 

எரிபொருள் பிரச்சினை இவ்வாறு நீடித்து மழைவீழ்ச்சியும் கிடைக்கப்பெறாவிட்டால் மார்ச் மாத இறுதியில் மின்சார விநியோகத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்படும். எனவே மாலை 6.30 முதல் 9 மணி வரையான காலப்பகுதியிலேயே அதிகளவான நேரத்திற்கு மின் துண்டிப்பு இடம்பெறும். 

பிற்பகல் 2.30 முதல் 4 கட்டங்களாக மின் துண்டிப்பை மேற்கொள்வதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்காக இன்றைய தினம் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. 

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அதற்கான அனுமதியை வழங்கினால் மின் துண்டிப்பு இடம்பெறும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரட்ன குறிப்பிட்டுள்ளார். 


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.