தினமும் இரு மணி நேர மின் வெட்டே சிறந்த தீர்வு; இன்று முடிவு

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
தினமும் இரு மணி நேர மின் வெட்டே சிறந்த தீர்வு; இன்று முடிவு

இந்த நேரத்தில் நாளொன்றுக்கு ஒரு மணித்தியாலமும் இரு மணித்தியாலங்களும் மின்வெட்டு அவசியமானது என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இல்லையெனில், ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டை தவிர்க்க முடியாமல் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றனர்.

 நீர் மின் உற்பத்தி 25 வீதமாகக் குறைக்கப்பட்டுள்ள தாகவும், மின் உற்பத்திக்கு நீரை பயன்படுத்தினால், மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக் கங்களில் நீர் நெருக்கடி மேலும் அதிகரிக்கும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் 60% ஆக குறைந்துள்ள தாகவும், அது 40%க்கு கீழ் குறைந்தவுடன் மின் உற்பத்தியை நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். 

எரிபொருளை வாங்குவதற்கு டொலர் கிடைக்காத தாலும், தனியார் டீசல் மின் உற்பத்தி நிலையங்களில் அவசர கொள்முதலின் கீழ் அதிக விலைக்கு மின்சாரம் பெற முடியாததாலும் தினமும் இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதே சிறந்த தீர்வாக அமையும் எனவும் தெரிவிக்கின்றனர்.

 இப்படியே தொடர்ந்தால் அடுத்த மூன்று நான்கு வாரங்களுக்கு தினமும் ஏழு முதல் எட்டு மணி நேரம் மின்சாரம் துண்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் எச்சரிக்கின்றனர். 

இதேவேளை, மின்வெட்டை அனுமதிப்பதா இல்லையா என்பதை இன்று தீர்மானிக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

நாட்டில் நிலவும் மின் நெருக்கடி குறித்து ஆய்வு செய்து இன்று பிற்பகல் முடிவு எடுக்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/2Zhv1aQ
https://ift.tt/3vnDiVc

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.