நாடு மீண்டும் முடக்கப்படுமா? சுகாதாரப் பணிப்பாளரின் அறிவிப்பு!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 

நாடு மீண்டும் முடக்கப்படுமா? சுகாதாரப் பணிப்பாளரின் அறிவிப்பு!

கொரோனா தொற்று பரவுதல் மிகவேகமாக அதிகரித்துள்ளமையால். நாட்டை முடக்கிவிடுமாறு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் தனிநபர்களிடமிருந்தும் அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சுக்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

அவ்வாறு கோரிக்கை விடுக்கும் பிரிவுகளில், சுகாதார தொழிற்சங்கங்கள் சிலதும் அடங்குகின்றன. இது தொடர்பில், சுகாதார சேவைகள் பயணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கையில், நாட்டை முடக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

 எனினும், நாட்டை முடக்குவதற்கு இத்தருணத்தில் எந்தவிதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என்றார். நாட்டை முடக்குவது பிரச்சினைக்குத் தீர்வாகாது. நாடு திறந்திருக்கும் போ​தே, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ​

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகுவது அதிகரித்தாலும், அந்த நோயாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்கள் குறைவாகும் என்றுத் தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத், தொற்றாளர்களில் 80 சதவீதமானவர்கள் வீடுகளிலேயே தடுத்துவைத்து சிகிச்சையளிக்க இயலு​மாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 “கொரோனா வைரஸ் தொற்றுவதன் வேகம் அதிகரித்துள்ளமையால் சகலரும் மிகவும் அவதானமாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://bit.ly/3r9BD6M
https://bit.ly/3r6XuvI

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.