வரலாற்றில் இன்று பிப்ரவரி 02.2022

 வரலாற்றில் இன்று பிப்ரவரி 02.2022


பெப்ரவரி 2  கிரிகோரியன் ஆண்டின் 33 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 332 (நெட்டாண்டுகளில் 333) நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

880 – பிரான்சின் மூன்றாம் லூயி மன்னர் சாக்சனியில் இடம்பெற்ற போரில் எசுக்காண்டினாவிய நோர்சு இராணுவத்திடம் தோற்றார்.

962 – புனித உரோமைப் பேரரசராக முதலாம் ஒட்டோ முடிசூடினார்.

1141 – லிங்கன் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்து மன்னர் இசுட்டீவன் தோற்கடிக்கப்பட்டு பேரரசி மெட்டில்டாவின் படைகளினால் கைது செய்யப்பட்டார்.

1822 – பிரித்தானிய இலங்கையின் ஆளுநராக சேர் எட்வேர்ட் பஜெட் நியமிக்கப்பட்டார்.

1848 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: குவாடுலுப் கிடால்கோ உடன்படிக்கை எட்டப்பட்டது.

1848 – கலிபோர்னியாவில் தங்கம் தேடுவதற்காக சீனர்கள் கப்பலில் சான் பிரான்சிஸ்கோ வந்திறங்கினார்கள்.

1868 – சப்பானிய பேரரசு ஆதரவுப் படைகள் ஒசாக்கா கோட்டையை தோக்குகாவா படைகளிடம் இருந்து கைப்பற்றி அதனை எரித்து சாம்பலாக்கினர்.

1878 – துருக்கியின் மீது கிரேக்கம் போரை அறிவித்தது.

1880 – முதலாவது மின்சார வீதி விளக்குகள் அமெரிக்காவில் இந்தியானாவில் நிறுவப்பட்டன.

1899 – ஆஸ்திரேலியாவின் தலைநகரை சிட்னிக்கும் மெல்பேர்னிற்கும் இடையில் கன்பராவில் அமைப்பதென முதலமைச்சர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

1901 – விக்டோரியா மகாராணியின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.

1920 – எஸ்தோனியாவுக்கும் உருசியாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.

1943 – இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போரின் பின்னர் கடைசி செருமனியப் படைகள் சோவியத் ஒன்றியத்திடம் சரணடைந்தன. 91,000 பேர் உயிருடன் பிடிக்கப்பட்டனர்.

1946 – அங்கேரியக் குடியரசு அமைக்கப்பட்டது.

1971 – ஈரநிலங்களின் பாதுகாப்பு, அவற்றின் தாங்குநிலைப் பயன்பாடு தொடர்பான பன்னாட்டு ராம்சர் சாசனம் ஈரானில் கையெழுத்திடப்பட்டது.

1971 – உகாண்டாவில் ஒரு வாரத்தின் முன்னர் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின்னர் இடி அமீன் அரசுத்தலைவராகத் தன்னை அறிவித்தார்.

1972 – டப்ளினில் பிரித்தானிய தூதரகம் தேசியவாதிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.

1982 – சிரியாவின் ஹமா நகரில் சிரிய அரசு மேற்கொண்ட தாக்குதல்களில் கிட்டத்தட்ட 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1989 – ஆப்கான் சோவியத் போர்: ஒன்பது ஆண்டு கால முற்றுகையின் பின்னர் கடைசி உருசியப் படைகள் ஆப்கானித்தானில் இருந்து வெளியேறின.

1990 – தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் பிரடெரிக் வில்லியம் டி கிளர்க் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தடையை நீக்குவதாகவும், நெல்சன் மண்டேலாவை சிறையில் இருந்து விடுவிக்கவிருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

1998 – பிலிப்பீன்சில் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 104 பேர் உயிரிழந்தனர்.

2005 – கனடிய அரசு 2005 சூலை 20 முதல் ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கும் குடிமைத் திருமணச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது.

2012 – பப்புவா நியூ கினியில் பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியதில் 146-165 வரையானோர் உயிரிழந்தனர்/.

இன்றைய தின பிறப்புகள்

1522 – லொடோவிக்கோ பெராரி, இத்தாலியக் கணிதவியலாளர் (இ. 1565)

1859 – ஹேவ்லாக் எல்லிஸ், பிரித்தானிய உளநலவியலாளர் (இ. 1938)

1871 – பா. வே. மாணிக்க நாயக்கர், அறிவியல் தமிழ் வளர்த்த தமிழிஞர் (இ. 1931)

1882 – ஜேம்ஸ் ஜோய்ஸ், அயர்லாந்து எழுத்தாளர், கவிஞர் (இ. 1941)

1896 – வெ. அ. சுந்தரம், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி (இ. 1967)

1905 – அய்ன் ரேண்ட், உருசிய-அமெரிக்க எழுத்தாளர், மெய்யியலாளர் (இ. 1982)

1913 – மசனோபு புக்குவோக்கா, சப்பானிய வேளாண் அறிஞர், மெய்யியலாளர் (இ. 2008)

1915 – குஷ்வந்த் சிங், இந்திய ஊடகவியலாளர், எழுத்தாளர் (இ. 2014)

1933 – தான் சுவே, பர்மாவின் 8-வது பிரதமர்.

1939 – தாலே தோமஸ் மார்டென்சென், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 2014)

1947 – சோ. கிருஷ்ணராஜா, ஈழத்து மெய்யியலாளர், கல்வியாளர் (இ. 2009)

1949 – சுனில் வெத்திமுனி, இலங்கைத் துடுப்பாட்ட வீரர்.

1977 – சக்கீரா, கொலம்பியப் பாடகி, நடிகை.

1985 – உபுல் தரங்க, இலங்கைத் துடுப்பாட்ட வீரர்.

இன்றைய தின இறப்புகள்

1594 – கோவானிப் பீர்லூயிச்சி தா பலஸ்த்ரீனா, இத்தாலிய இசையமைப்பாளர் (பி. 1525)

1907 – திமீத்ரி மெண்டெலீவ், தனிம அட்டவணையைத் தொகுத்த உருசிய வேதியியலாளர் (பி. 1834)

1914 – தில்லையாடி வள்ளியம்மை, இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த தென்னாப்பிரிக்கத் தமிழ்ப் பெண் போராளி (பி. 1898)

1955 – ஓஸ்வால்ட் அவேரி, கனடிய-அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர் (பி. 1877)

1960 – மு. இராகவையங்கார், தமிழக ஆய்வாளர், பதிப்பாசிரியர், இதழாசிரியர், சொற்பொழிவாளர், கவிஞர் (பி. 1878)

1970 – பெர்ட்ரண்டு ரசல், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய மெய்யியலாளர், கணிதவியலாளர் (பி. 1872)

1982 – மோகன் லால் சுகாதியா, இராஜஸ்தான் முதலமைச்சர் (பி. 1916)

1987 – ஆபிரகாம் செல்மனோவ், உருசிய இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1913)

2009 – கே. கோவிந்தராஜ், இலங்கை மலையகத் தமிழ் எழுத்தாளர், பத்திரிகையாளர் (பி. 1949)

2010 – கொச்சி ஹனீஃபா, மலையாளத் திரைப்பட நடிகர், இயக்குனர் (பி. 1948)

2013 – ப. சண்முகம், புதுச்சேரி மாநிலத்தின் 9வது முதலமைச்சர் (பி. 1927)

2014 – பிலிப் சீமோர் ஹாப்மன், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர் (பி. 1967)

இன்றைய தின சிறப்பு நாள்

ஸ்டாலின்கிராத் சமர் வெற்றி நாள் (உருசியா)

கண்டுபிடிப்பாளர் நாள் (தாய்லாந்து)

உலக சதுப்பு நில நாள்


 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.