சதொச ஊடாக தண்ணீர் போத்தல்களுக்கு விசேட சலுகை.

 𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀

சதொச ஊடாக தண்ணீர் போத்தல்களுக்கு விசேட சலுகை.


அரச மற்றும் அரை அரச நிறுவனங்களுக்கு லங்கா சதொச ஊடாக மொத்த விலையில் தண்ணீர் போத்தல்களை வழங்கும் போது விசேட சலுகைகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர், பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.


புதிய நடைமுறைக்கமைய தண்ணீர் போத்தல் ஒன்றுக்கென நிறுவனத்தால் 18.22 வீதம் சலுகை வழங்கப்படும் எனவும் தண்ணீர் போத்தல் ஒன்றின் பெறுமதி 29 ரூபாவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனினும் அதனை பயன்படுத்தி மீள கையளிக்கும்பட்சத்தில், 10 ரூபா மீள செலுத்தப்படும். இந்நிலையில் தண்ணீர் போத்தலுக்கென 19 ரூபாவை மாத்திரமே செலவிட வேண்டி வருமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதேவேளை பாவனைக்கு பின்னரான வெற்று தண்ணீர் போத்தல்களை சதொச கிளைகளில் ஒப்படைக்கும்போது, பாவனையாளர்களுக்கு 10 ரூபா மீள கையளிக்கப்படுமென போத்தலிலுள்ள லேபளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதனால் 25 ரூபா மாத்திரமே பாவனையாளர்கள் தண்ணீர் போத்தலுக்கென செலவிட வேண்டி வரும். 10 ரூபா சலுகை வழங்கப்படுகிறது. சூழலுக்கு இணைவான தேசிய வேலைத்திட்டமாக சதொச நிறுவனம் இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.


◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌  ⸙ ━━━━━━━ ◈


👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்


#TELEGRAM_CHANNEL

👇👇👇

https://t.me/Internationaltamilmedia

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.